திண்டுக்கல்லில் தாறுமாறாக காரை ஒட்டி விபத்தை ஏற்படுத்திய வாலிபர்களால் பொதுமக்கள் காயம் அடைந்தனர். நாகல் நகர் மேம்பாலத்தில் சர்வீஸ் சாலையில் 24 மணி நேரமும் டாஸ்மாக் கடையில் மது பாட்டில்கள் கிடைப்பதால் குடிமகன்கள் தொல்லையும் தினமும் அரங்கேறி வருகிறது.இதனால் அப்பகுதி மக்களும் வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.

ஆகவே தங்கு தடை இன்றி 24 மணி நேரமும் மது பாட்டில் விற்பனை செய்பவர்கள் மீது அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் தாறுமாறாக வாகனம் ஓட்டுபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.




