• Mon. Sep 21st, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

திண்டுக்கல் அருகே கிணற்றில் தவறி விழுந்த முன்னாள் ராணுவ வீரர்..,

ByS.Ariyanayagam

Apr 29, 2026

திண்டுக்கல் அருகே கிணற்றில் முன்னாள் ராணுவ வீரர் தவறி விழுந்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. திண்டுக்கல்-நத்தம் சாலை சட்டக்காரன்பட்டி அருகே 80 அடி ஆழமுள்ள தண்ணீர் இல்லாத கிணற்றில் முன்னாள் ராணுவ வீரர் பீட்டர் (வயது 93) என்ற முதியவர் தவறி விழுந்தார்.

இதையடுத்து உதவி மாவட்ட அலுவலர் மயில்ராஜ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி கிணற்றிலிருந்து பீட்டரை உயிருடன் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.