திண்டுக்கல் அருகே குடும்பத்த தகராறு காரணமாக மனைவியை கணவன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல் செம்பட்டி அருகே அழகர் நாயக்கன்பட்டியை சேர்ந்த துர்கா தேவியை கணவர் ஜெய்கணேஷ் கத்தியால் குத்தி கொலை செய்தார்.
நேற்று காலை திண்டுக்கல் திருச்சி சாலை முள்ளிப்பாடி அருகே கணவன் மனைவி இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் கணவர் ஜெய்கணேஷ் தாக்கியதில் மனைவி துர்கா தேவி பலத்த காயமடைந்தார்.

இதையடுத்து தாலுகா போலீசார் அவர்கள் 2 பேரையும் சமரசம் செய்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் வீட்டிற்கு சென்ற நிலையில் மீண்டும் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த கணவன் மனைவியை கொலை செய்துள்ளார்.
இது குறித்து செம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




