• Fri. Sep 18th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

ரயில்வே சுரங்கபாதை பாலத்தில் தண்ணீர் தேங்கி நிற்பதால் கிராம மக்கள் அவதி..,

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள குஜிலியம்பாறை தாலுகா புளியம்பட்டி சந்தையில் இருந்து பில்லமநாயக்கன்பட்டி வழியாக கூம்பூர் வரை செல்லும் கிராம சாலை உள்ளது.

புளியம்பட்டி சந்தையை அடுத்து இந்த கிராமச் சாலையின் வழியாக கரூர் – திண்டுக்கல் ரயில்வே சாலை செல்கிறது. ரயில்வே சுரங்கபாதை பாலம் பணி முழுமை பெறாமல் அமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டு வாகனங்கள் சென்று வருகின்றது.

இந்நிலையில் இந்த சுரங்கப்பாதை பாலத்தின் கீழ் பகுதியில் இருந்து நிரந்தரமாக நீரூற்று தண்ணீர் வருவதால் பாலத்தில் நிரந்தரமாக தண்ணீர் தேங்கி நிற்பதால்
பாசாண் பிடித்துள்ளதால் இந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் வழுக்கி கீழே விழுந்து சிராய்ப்பு காயங்குடன் உயிர் பயத்துடன் சென்று வருகின்றனர்.

அதேபோல் கார் மற்றும் வேன் டயர் வழுக்கி டிரைவரின் கட்டுப்பாட்டை இழக்கின்ற நிலை ஏற்பட்டு பிறகு சுதாரித்து செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது.

ரயில்வே பாலத்தில் நிரந்தரமாக தண்ணீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுத்து சீரான போக்குவரத்து வசதியை ஏற்படுத்திட ரயில்வே துறை மற்றும் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.