• Sun. Apr 26th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

மின்சாரம் தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு..!

ByK Kaliraj

Apr 26, 2026

சாத்தூர் அருகே உள்ள கங்கரக்கோட்டை ஊராட்சியை சேர்ந்த எலுமிச்சங்கப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முனியராஜ் (வயது30) இவர் இங்கு உள்ள பட்டாசு ஆலையில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். எலுமிச்சங்காய்ட்டியில் புதிய வீடு கட்டி வருகிறார்.

வீடு கட்டுமானத்திற்கு தினமும் மோட்டார் மூலம் சுவற்றில் தண்ணீர் ஊற்றி நனைப்பது வழக்கம் .நேற்று வழக்கம் போல் சுவரில் மோட்டார் மூலம் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தபோது மின்தடை ஏற்பட்டுள்ளது. மின்தடை ஏற்பட்டதால் வயரை கையில் சுற்றி வைத்த நிலையில் மீண்டும் மின்சாரம் சப்ளை வந்தபோது முனியராஜ் மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டார். இதனைப் பார்த்து மனைவி கலாமணி (வயது 27) உள்ளிட்ட அக்கம்பக்கத்தினர் முனியராஜை மீட்டு கோவில்பட்டியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்து பார்த்ததில் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து மனைவி கலாமணி ஏழாயிரம் பண்ணை போலீசில் புகார் செய்ததன் பேரில் சப் இன்ஸ்பெக்டர் ராஜா விரைந்து சென்று முனியராஜ் உடலை மீட்டு சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். தொடர்ந்து இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இறந்த முனியராஜ்க்கு ஒரு மகள், இரண்டு மகன்கள் உள்ளனர்.