மதுரை மாவட்டம் மேலூர் பாரதிதாசன் அகாடமி சார்பாக 10,11,12-ம் வகுப்பு மாணவ,மாணவியர்களுக்கான எங்கு படிக்கலாம்?என்ன படிக்கலாம்? எப்படி படிக்கலாம்? உயர்கல்வி வழிகாட்டும் பயிலரங்கம் நடத்தப்பட்டது.

பாரதிதாசன் அகாடமி தாளாளர் சி.ஜீவா வரவேற்றார். முன்னாள் அனைவருக்கும் கல்வி திட்டம் மாநில ஒருங்கிணைப்பாளர் கல்வியாளர் பேராசிரியர் முனைவர் எஸ்.எஸ்.மணியன்,வழக்குரைஞர் அப்துல் ரகுமான், SRM பல்கலைக்கழகம் பேராசிரியர் கார்த்திக் ஆகியோர் மாணவ,மாணவியர்களுக்கு ஆலோசனை வழங்கினார்கள்.
மாணவ, மாணவியர்கள் ஆர்வமுடன் கற்றுக்கொண்டார்கள்.

சமூக செயற்பாட்டாளர் கல்லானை சுந்தரம்,சந்தோஷ் பங்கேற்றார்கள்.
பாரதிதாசன் அகாடமி செயலாளர் பாவலர் சி. சூர்யா நன்றி கூறினார்.





