• Sun. Oct 4th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

த.வெ.க ஒட்டுமொத்தமாக தோற்கப்போகிறது-கே. டி. ஆர் பேட்டி…!

ByK Kaliraj

Apr 24, 2026

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே திருத்தங்கல்லில் உள்ள கலைமகள் பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் முன்னாள் அமைச்சரும் சிவகாசி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளருமான ராஜேந்திர பாலாஜி வாக்கு செலுத்தினார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ராஜேந்திர பாலாஜி,

அதிமுக 210 தொகுதிகளில் மாபெரும் வெற்றி பெறும்

எடப்பாடி பழனிச்சாமி 10 முறை தோற்றவர் என தவெக தலைவர் விஜய் விமர்சித்தது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர்,

தவெக ஒட்டுமொத்தமாக தோற்கப் போகிறது, விஜய் மொத்தமாக தோற்கப்போகிறார் என்றார், எடப்பாடி பழனிச்சாமி கிளைக் கழகத்திலிருந்து உழைத்து வந்தவர்

அரசியலில் வெற்றி தோல்வி என்பது சகஜம். இந்த தேர்தலில் அமோக வெற்றி பெற்று எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி அமைப்பார்.

எடப்பாடி பழனிச்சாமியின் நேர்மை, வெகுளித்தனம், பொறுமைக்கும், ‌ ,உண்மைக்கும், அவரது நல்ல எண்ணத்திற்கும், வாக்குகளை மக்கள் அள்ளிக் கொடுக்கப் போகிறார்கள். இரட்டை இலை தழைக்கப் போகிறது. என கூறினார்