200 தொகுதிக்கு மேல் வெற்றி பெற்று மீண்டும் மு க ஸ்டாலின் முதல்வராவார் திண்டுக்கல்லில் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ பெரியசாமி பேட்டி அளித்தார்.
திண்டுக்கல் வாசவி பள்ளியில் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஆத்தூர் தொகுதி திமுக வேட்பாளருமான ஐ .பெரியசாமி மற்றும் திண்டுக்கல் தொகுதி திமுக வேட்பாளர் ஐ பி செந்தில்குமார் ஆகியோர் குடும்பத்துடன் வாக்களித்தனர்.

ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தமிழகத்தின் உரிமையை மீட்கக்கூடிய தலைவர் முதல்வர் ஸ்டாலின். அவர் மீண்டும் இரண்டாவது முறையாக மாபெரும் வெற்றியை பெற்று மீண்டும் முதல்வராக பதவி ஏற்பார் .

ஜனநாயக கடமையை ஆற்றி உள்ளோம். மக்கள் விறுவிறுப்பாக மதச்சார்பற்ற கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதை கண்கூடாக பார்க்கின்றோம். கண்டிப்பாக மதச்சார்பற்ற கூட்டணி 200 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என பேசினார்.
திண்டுக்கல் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஐ .பி.செந்தில்குமார் அளித்த பேட்டியில், திண்டுக்கல்லில் திமுகவிற்கு வேற்றி பிரகாசமாக இருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் வெற்றி பெற்று முதல்வர் ஸ்டாலின் மீதும் ஆட்சி அமைப்பார்
திராவிட மாடல் 2.0 மக்களுக்கு பயனளிக்கக்கூடிய ஆட்சியாக தொடரும் என பேசினார்.




