மதுரை மாவட்டம் உசிலம்பட்டி டி.இ.எல்.சி., ஆசிரியர் பயிற்சி பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் உசிலம்பட்டி காங்கிரஸ் வேட்பாளர் சரவணக்குமார், தனது தாய், தந்தை, மனைவி குழந்தைகள் என குடும்பத்துடன் ஜனநாயக கடமையாற்றினார்.,

தொடர்ந்து பேசிய காங்கிரஸ் வேட்பாளர் சரவணக்குமார்., வாக்கு சேகரிப்பு முடிந்தது, அதன் பலனாக மக்கள் மிகுந்த மகிச்சியோடு இன்று வாக்களித்து வருகிறார்கள், நானும் எனது ஜனநாயக கடமையாற்றியுள்ளேன்., மக்கள் எழுச்சியோடும், விழிப்புணர்வோடும் இருக்கிறார்கள்., யார் வர வேண்டும் என கிளியராக இருக்கிறார்கள்.,

நான் வாக்கு சேகரிக்க சென்ற போதே முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்த திட்டங்களை மக்களே என்னிடம் சொல்லும் அளவு மக்களிடம் சென்றடைந்துள்ளது., என பேசினார்.,




