• Thu. Apr 23rd, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

தமிழகத்திற்கு ஒளிமயமான எதிர்காலம் உருவாகும்- கே.ஆர். ஜெயராம் நம்பிக்கை..,

BySeenu

Apr 23, 2026

2026ல் தமிழகத்திற்கு ஒளிமயமான எதிர்காலம் உருவாகும் என வாக்கினை பதிவு செய்த பின் பேட்டி அளித்த சிங்காநல்லூர் தொகுதி வேட்பாளர் கே.ஆர். ஜெயராம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு காலை முதலே வாக்குச்சாவடிகளில் மக்கள் திரளாகக் கூடிச் சென்று ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். அந்த வகையில், வேட்பாளர்களும் பொதுமக்களுடன் இணைந்து தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சேரன்மாநகர் பகுதியில் அமைந்துள்ள வாக்குச்சாவடி மையத்தில், சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் கே.ஆர்.ஜெயராம் அவரது குடும்பத்தினருடன் வந்து வாக்கு பதிவு செய்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கே.ஆர்.ஜெயராம்“நாங்கள் குடும்பத்துடன் வந்து வாக்களித்துள்ளோம். திமுக அரசை மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் மக்கள் காலை முதலே வாக்குச்சாவடிகளுக்கு வந்து தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். தமிழகத்தில் கண்டிப்பாக மாற்றம் நிகழும்” என தெரிவித்தார்.

மேலும், “பிரதமர் மோடி ஆதரவுடன், எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தமிழகத்திற்கு ஒளிமயமான எதிர்காலம் உருவாகும்” என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.