திண்டுக்கல் மாவட்ட ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் 1989-ம் ஆண்டு முதல் இன்று வரை (2026) 37 வருடங்களாக ஒரே தொகுதியில் போட்டியிட்;டு வெற்றிபெற்று வரும் வெற்றி வேட்பாளார் ஐ.பெரியசாமிக்கு தொகுதி மக்களின் மனதில் என்றும் நீங்கா இடம் பெற்று வருகி;றார்.

பள்ளிச் சிறுவர்கள் பாதுகாப்புடன் கல்வி பயில அங்கன்வாடி மைய கட்டிடங்கள், கல்லூரி மாணவர்கள் உயர் கல்வி கற்க அரசு கல்லூரிகள், மாற்றுத்திறனாளிக்கு தேவைப்படும் உபகரணங்கள், பள்ளி மாணவர்களுக்கு தேவைப்டும் கல்வி மற்றும் விளையாட்டு உபகரணங்கள், மற்றும் அனைத்து கிராமங்களுக்கும் தார் சாலை வசதி, பாதுகாப்பான குடி தண்ணீர் வழங்க மேல்நிலைத் தண்ணீர் தொட்டி உட்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வாரி வழங்கி வருவதால் ஆத்தூர் தொகுதியில் உள்ள அரசியல் கட்சி அமைப்புகள், பலதரப்பட்ட சமுக அமைப்புகள், வணிகர்கள், வர்தகர்கள் மற்றும் தொழிலாளர் நல சங்கத்தினர், விவசாயிகள் உட்பட பல்வேறு தரப்பினர் தங்களது ஆதரவு கடிதங்களை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்களிடம் வழங்கி மீண்டும் ஒரு வரலாற்று சாதனை படைக்க வேண்டுமென வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தன்னரசு மக்கள் முன்னேற்ற நிறுவனர் கிருபாகரன், ஒட்டுமொத்த ஆதரவை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்களுக்கு தெரிவித்துள்ளார். இதுபோல ஆத்தூர் பட்டாதாரர்கள் சங்கம், வணிகர் சங்கம், விவசாயிகள் சங்கம், சின்னாளபட்டி வட்டார பிள்ளைமார் பேரவை நிர்வாகிகள், கீழக்கோட்டை தேவாங்கர் மகாஜனசபை, சித்தையங்கோட்டை தேவாங்கர் சங்கத்தினர், சின்னாபட்டி வட்டார சுங்குடி சாயத் தொழிலாளர்கள் சங்கத்தினர் மற்றும் சுங்குடி காட்டன் சேலை சாயம் ஏற்றுதல் நலச் சங்கத்தினர், உட்பட பல்வேறு சங்கத்தினர் அமைச்சர் ஐ.பெரியசாமியின் மாபெரும் வெற்றிக்கு உறுதுணையாக இருப்போம் என ஆதரவு கடிதம் அளித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதனால் மே 23-ம் தேதி நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் பதிவாகும் வாக்குகளில் 80 சதவீத வாக்குகளுக்கு மேல் அமைச்சர் ஐ.பெரியசாமி பெற்று மாபெரும் சாதனை படைப்பார் என ஆத்தூர் தொகுதி மக்கள் கூறுகின்றனர்.

ஆத்தூர் தொகுதியில் பல்வேறு தரப்பினர் அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு ஆதரவு தெரிவித்து வருவது திமுகவினரை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.



