• Sun. Jun 7th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

தனியார் டிராவல்ஸ் உரிமையாளர் மனைவி கொண்டு வந்த ரூ 1.80 ஆயிரம் பறிமுதல்..,

வேடசந்தூர் அருகே தனியா டிராவல்ஸ் உரிமையாளர் மனைவி கொண்டு வந்த ரூ 1.80 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள கருக்காம்பட்டி பகுதியில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் பிரஸ்நேவ் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்பொழுது அந்த வழியாக நடந்து வந்து கொண்டிருந்த தம்மனம்பட்டியை சேர்ந்த தனியார் வாடகை டிராவல்ஸ் உரிமையாளர் பெருமாள் மனைவி பிரியா (வயது 36) அவரது உறவினர் சக்திவேல் (வயது 44) ஆகியோரை சந்தேகப்பட்டு பறக்கும் படையினர் சோதனை செய்த போது உரிய ஆவணங்கள் இன்றி பிரியாவிடம் இருந்த ரூ 80 ஆயிரத்தையும், சக்திவேலிடம் இருந்த ரூ 1 லட்சத்தையும் பறிமுதல் செய்து வேடசந்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் ராஜேந்திரனிடம் ஒப்படைத்தனர். பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட ரூ 1.80 லட்சத்தை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.