• Tue. Jun 2nd, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

தேர்தல் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரிக்க திண்டுக்கல் வருகை..,

அன்புடையீா்,
வணக்கம்.
மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளா்களை ஆதரித்து மாண்புமிகு கழகத்தலைவா் அண்ணன் தளபதியார் அவா்கள் தேர்தல் பிரச்சாரம் செய்து வாக்குசேகரிக்க இன்று 17.04.2026 வெள்ளிக் கிழமை மாலை 7.00 மணியளவில் மணிக்கூண்டு, திண்டுக்கல் வருகை தருகிறார்.

எனவே, நமது திண்டுக்கல் மேற்கு மாவட்டத்திற்குட்ட மாவட்ட கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூா் கழக நிர்வாகிகள், முன்னாள்/இந்நாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூா் சார்பு அணி நிர்வாகிகள், முன்னாள்/இந்நாள் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் பெருந்திரளாக கலந்து கொள்ளுமாறு தங்களை அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.

தங்களன்புள்ள,
அர.சக்கரபாணி, பி.ஏ,
மாவட்ட கழக செயலாளா்
திண்டுக்கல் மேற்கு.