• Sun. Sep 6th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

திமுக வேட்பாளர் கிருத்திகா தங்கபாண்டியன் தீவிர தேர்தல் பரப்புரை..,

ByKalamegam Viswanathan

Apr 17, 2026

திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் திமுக அதிமுக தீவிர தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வரும் நிலையில் திமுக வேட்பாளர் கிருத்திகா தங்கபாண்டியன் நல்லூர், சோளங்குருணி, வலையன்குளம், பாரப்பத்தி எலியார்பத்தி கூட கோவில் பகுதியில் தீவிர தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் சோளங்குருணி பகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்ய வந்தபோது அப்பகுதியைச் சேர்ந்த சாது ராஜன் என்ற பேச்சாளர் தேர்தல் வெற்றி அறிவிப்பு செய்வது போல் சென்னை சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளரை காட்டிலும் 90 ஆயிரத்து 810 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்றும் சற்றுமுன் கிடைத்த செய்தி திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கிருத்திகா தங்க பாண்டியன் தன்னை எதிர்த்துப் போட்டியிட்டு அதிமுக வேட்பாளரை காட்டிலும் 8 ஆ ஆயிரத்து 640 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் எனக்கூறி அனைவரையும் உற்சாகப்படுத்தினார் .

சட்ட மன்ற தேர்தல் பரப்புரையின் போதே திமுக வேட்பாளர் வெற்றி என்ற அறிவிப்பு திமுக,மற்றும் கூட்டணி கட்சியினர். இடையே பெரிதும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.