• Sat. Apr 18th, 2026
WhatsAppImage2026-04-16at222113
previous arrow
next arrow
Read Now

ஆட்சித் தலைவர் பிரவீன் குமார் தலைமையில் முளைப்பாரி மூலம் தேர்தல் விழிப்புணர்வு ஊர்வலம்..,

ByP.Thangapandi

Apr 16, 2026

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் 100% வாக்களிப்பது குறித்து பாரம்பரிய முறையில் சுமார் 200க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் முளைப்பாரி திருவிழா மூலம் தேர்தல் விழிப்புணர்வு ஊர்வலம் வருவாய் துறை சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரவீன் குமார் தலைமையில் நடைபெற்றது.,

இந்த விழிப்புணர் ஊர்வலம் கையில் பதாகைகளை ஏந்தி மேளதாளங்கள் முழங்க, கரகாட்டத்துடன் உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் துவங்கி பேரையூர் சாலை, தேவர் சிலை, தேனி சாலை வழியாக சென்று உசிலம்பட்டி புதிய பேருந்து நிலையத்தில் நிறைவு செய்தனர்.,

இதில் வாக்களிப்போம் வாக்களிப்போம் அனைவரும் வாக்களிப்போம், வாக்களிப்பது என் கடமை, வாக்களிப்பது என் உரிமை, என் வாக்கு என் பெருமை என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

இதற்கு முன்னதாக பேசிய மாவட்ட ஆட்சித் தலைவர் பிரவீன் குமார்.,

அனைவரும் கண்டிப்பாக வரும் 23 ஆம் தேதி 100% வாக்களிக்க வேண்டும் என்பது நமது ஜனநாயகம் அந்தக் கடமையை மக்களுக்கு தரவேண்டும்.,

இந்த விழிப்புணர் பிரச்சாரம் என்பது உசிலம்பட்டி நடத்துவதற்கு காரணம் கடந்த சட்டமன்றத் தேர்தலில் வாக்குப்பதிவை பார்க்கும் போது குறிப்பாக மதுரை மாவட்டத்தில் இருக்கின்ற 10 சட்டமன்ற தொகுதிகளில் குறைந்த வாக்கு பதிவு உசிலம்பட்டியில் பதிவாகி உள்ளது.,

இதில் வாலாந்தூர், மேக்கிழார்பட்டி, மொண்டிக்குண்டு கிராமங்களில் 40% மக்கள் தான் வாக்களித்து வாக்குப் பதிவாகியுள்ளது., 100 வாக்காளர்களில் 40 வாக்காளர்கள் மட்டும்தான் வாக்களிப்பது மூலம் எதிர்காலத்தில் முடிவு செய்கிறார்கள். வாக்களிக்காமல் போகக்கூடிய வாக்காளர்களின் 40 பேர் மட்டும் தான் முடிவு எடுக்கிறார்கள்.

அதனால் வருகின்ற தேர்தலில் மதுரை மாவட்டத்தில் குறிப்பாக உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதியில் இருக்கக்கூடிய அனைவரும் உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து தேர்தல் திருவிழா தமிழ்நாடு பெரும் விழா என நாம் கொண்டாடி கொண்டிருக்கிறோம்.,
வருகின்ற 23 ந்தேதி உங்கள் குடும்ப உறுப்பினருடன் இணைந்து ஒரு திருவிழாவிற்கு போகிற போது சந்தோசமாக முளைப்பாரியுடன் கொண்டு வந்து சிறப்பான நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளீர்கள்., இதே உற்சாகத்துடன் மக்களாட்சியினுடைய திருவிழாவில் கலந்து கொள்ள வேண்டும்., வரும் 23ஆம் தேதி மீண்டும் சந்திப்போம் அருகில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் என பேசினார்.

இதில் உசிலம்பட்டி சார் ஆட்சியர் உத்கர்ஷ் குமார் மற்றும் வருவாய்த் துறையினர் மற்றும் சுமார் 200 க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.