• Mon. Apr 13th, 2026
WhatsAppImage2026-04-10at0716401
previous arrow
next arrow
Read Now

வெடி விபத்து நடந்த இடத்தை நேரில் சென்று பார்வையிட்ட நைனார் நாகேந்திரன்..,

ByK Kaliraj

Apr 13, 2026

விருதுநகர் மாவட்டம் வானம் பார்த்த பூமி இப்பகுதி மக்களின் வாழ்வாதாரமாக இருப்பது இந்த பட்டாசு தொழில்கள் அரசு அதிகாரிகளின் அதிகமான நெருக்கடி மற்றும் தீவிரம் காட்டுவதின் காரணமாகத்தான் இது போன்ற இப்பகுதி மக்கள் அவசரகதியில் பார்க்கும் வேலையினால் இதுபோன்ற வெடிவு ஏற்படுவதாக தெரிய வருகிறது .

அரசு அதிகாரிகள் பட்டாசு தொழிலாளர்களை துன்புறுத்துவது போன்று உணர்கிறேன்
இந்த பட்டாசு ஆலை வடிவத்தில் மூன்று பேர் காயமடைந்து மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

இந்த பகுதியில் இதை விட்டால் வேறு தொழில் கடை கிடையாது மாநில அரசு அதிகாரிகளுக்கு இது போன்ற தொந்தரவு படுத்த கூடாது என்பதை வலியுறுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்

இது போன்ற வெடி விபத்து ஏற்படும்போது உடனடியாக சிவகாசி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லக் கூடிய சூழல் நிலவி வருகிறது. அங்கு போக்குவரத்து இடையூறுகளால் செல்வதற்கு மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே இந்த வெம்பக்கோட்டை பகுதியில் குளிர் ஊட்டப்பட்ட மருத்துவ தீக்காயம் மருத்துவ சிகிச்சை பிரிவு கொண்டு வருவதற்கு முயற்சிப்பேன் என்றார்.

உரிமம் புதுப்பிப்பது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு அது பற்றி எனக்கு தெரியாது ஆனால் இப்போது அரசு அதிகாரிகள் ஆய்வு என்ற பெயரில் தொந்தரவு செய்யக்கூடாது நிம்மதியாக வேலை செய்ய விடவேண்டும் என கேட்டுக் கொண்டார் ஏனென்றால் இந்த
தொழில் தான் இப்பகுதி மக்களுக்கு வாழ்வாதாரம் எனவே இப்பகுதி தொழிலாளர்களையோ ஆளை உரிமையாளர்களோ இக்கட்டான சூழ்நிலைக்கு கொண்டு செல்லக்கூடாது என்றார் பட்டாசு தொழிலைப் பொறுத்தவரை கனிவாக நடந்து கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

காயம் பட்டாசு வெடி விபத்தில் காயம் மற்றும் உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் கொடுத்த கேள்விக்கு தற்போது வழங்கப்படும் நிவாரணம் என்பது போதாது என்றும் சுமார் 10 லட்ச ரூபாய் ஆவது நிதி அவர்களுக்கு வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார் நான் வெற்றி பெற்று வரும் நிலையில் முதலமைச்சரிடம் தெரிவித்து அதை நான் கண்டிப்பாக செய்வேன் என்றார்

பட்டாசு ஆலைகளுக்கு சாலை வசதிகள் குறைவு என்பது குறித்த கேள்விக்கு
மூன்று காலங்களில் குற்றம் செல்ல விரும்பவில்லை எனினும் சாத்தூர் பகுதி என்பது ஒரு சபிக்கப்பட்ட பகுதியாகவே இருந்து வருவதாக குற்றம் சாட்டினார் . ஏனென்றால் இப்பகுதியில் குடிப்பதற்கு தண்ணீர் வசதி கூட இல்லை என்றார் பெரும்பாலான கிராமங்களில் பெண்களுக்கு கழிப்பிட வசதியும் இல்லை பள்ளி செல்ல பேருந்து வசதி இல்லை கிராமங்களுக்கு பேருந்துக்கு செல்வதற்கு ஒரு கிலோமீட்டர் நடந்து செல்ல வேண்டிய சூழல் உள்ளது. இதில் ஏன் அரசு இவ்வளவு மெத்தன போக்காக உள்ளது என்பது தெரியவில்லை வருகின்ற காலங்கள் இதை சரி செய்ய என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து செய்யப்படும் என்றார்.