• Thu. Jun 18th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

கூம்பூர் வாரச்சந்தையில் வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சாரம்..,

வேடசந்தூர் அருகே உள்ள கூம்பூர் வாரச்சந்தையில் பொதுமக்களிடம் வாக்காளர் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வீநியோகம் செய்து வருவாய் துறையினர் பிரச்சாரம் செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி, குஜிலியம்பாறை தாலுகா கூம்பூர் கிராமம் வாரச்சந்தையில் குஜிலியம்பாறை தாலுகா உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் நந்தகோபால் தலைமையில் வழங்கல் அலுவலர் மேனகா, வேடசந்தூர் வருவாய் ஆய்வாளர் பாரதி மற்றும் வருவாய் துறையினர் வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் பொதுமக்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கி வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்.