• Wed. Apr 8th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

ஒட்டன்சத்திரத்தில் உலக சுகாதார தின விழா..,

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் கிறிஸ்துவ ஐக்கிய மருத்துவமனையில்
இந்தியா மருத்துவக்கழகம் கிளை சார்பில் உலக சுகாதார தின விழா நடைபெற்றது.

விழாவிற்கு கிறிஸ்துவ ஐக்கிய மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் இமானுவேல் தலைமை வகித்தார். துணை கண்காணிப்பாளர் டாக்டர் சாலோமன்தம்பி, இந்திய மருத்துவ கழகம் ஒட்டன்சத்திரத்திரம் கிளைத்தலைவர் டாக்டர் கருப்பண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினார்கள். ஒட்டன்சத்திரம் இந்திய மருத்துவக்கழக செயலாளர் டாக்டர் ஆசைத்தம்பி வரவேற்றுப் பேசினார்.

கொண்டறங்கி கீரனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் காசிமுருகபிரபு விழாவின் குறிக்கோள்கள் குறித்து பேசினார்.

முன்னாள் அரசு மருத்துவர் டாக்டர். முருகேசன் இந்திய மருத்துவக்கழக ஒட்டன்சத்திரம் துணைத் தலைவர் டாக்டர் முத்துச்சாமி மகப்பேறு சிறப்பு மருத்துவர் டாக்டர் அனுராதா, குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் சதீஷ்குமார் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார்கள்.

சுகாதார விழிப்புணர்வு கட்டுரைப்போட்டியில் வெற்றி பெற்ற அரசு டாக்டர்கள் பிரியங்கா, காவியா, கலைச்செல்வன் மற்றும் பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டியில் வெற்றி பெற்ற சாய்சக்தி செவிலியர் கல்லூரி மாணவிகள், சக்தி செவிலியர் கல்லூரி மாணவிகள், ஒட்டன்சத்திரம் கிறிஸ்துவ ஐக்கிய மருத்துவமனை செவிலியர் கல்லூரி மாணவிகள், அம்பிளிக்கை கிறிஸ்துவ செவிலியர் கல்லூரி மாணவிகள், ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனை செவிலியர்கள், எவர்கீரின் ஸ்போர்ட்ஸ் கிளப், சன்சட்டில் கிளப், கிறிஸ்துவ ஐக்கிய மருத்துவமனை, சட்டில் கிளப்பை சேர்ந்த இறகு பந்து போட்டியில் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு இந்திய மருத்துவக்கழகம் சார்பாக பரிசுகள் வழங்கப்பட்டன.

ஒட்டன்சத்திரம் கிறிஸ்துவ ஐக்கிய மருத்துவமனை செவிலியர் கல்லுாரி முதல்வர் விக்டரி மேடோனா நன்றி கூறினார். விழாவில் ஏராளமானோர் பங்கேற்றனர்.