ரேஷன் பொருள்களை கொள்ளையடித்த தற்போதைய திமுக எம்எல்ஏ தங்கபாண்டியன் மக்கள் விரட்டி அடிப்பார்கள்.
சொத்து வரியை குறைக்க நடவடிக்கை எடுப்பேன் என வாக்குறுதி

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் வேட்பாளர் பிரிசில்லா பாண்டியன் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறார் இராஜபாளையத்தில் செய்தியாளர்கள் சந்தித்த பொழுது இராஜபாளையம் மக்களுக்கு தான் வெற்றி பெற்றால் என்னென்ன திட்டங்கள் நிறைவேற்றபடும் என்பது குறித்து விரிவாக பேசினார்.
இராஜபாளையத்தில் குடிநீர் தட்டுப்பாடு அதிக அளவில் உள்ளது அதை சரி செய்ய இராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஆறாவது மையில் நீர் தேக்கத்தை சீரமைத்து சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பேன் இந்த பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் கட்டுவதற்கு உரிய நடவடிக்கை எடுப்பேன்.
அதேபோல் இங்கு உள்ள மாணவ மாணவிகள் பயில்வதற்கு பாலிடெக்னிக் மற்றும் அரசு கல்லூரிகள் கொண்டுவர நடவடிக்கை எடுப்பேன் ராஜபாளையம் பகுதியில் மாம்பழம் அதிகளவில் விளைச்சல் இருப்பதால் மாம்பழ கூழ் தயார் செய்யும் ஆளை கொண்டு வர நடவடிக்கை எடுப்பேன். இராஜபாளையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு ஹைடெக் மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் மருத்து உபகரங்கள் இல்லாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். அதற்கு தேவையான நடவடிக்கை எடுத்து நவீன மருத்துவ உபகரணங்கள் மருத்துவர்கள் அதிமுக ஆட்சி அமைந்த உடன் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளித்தார்.

அதேபோல் இராஜபாளையம் பகுதியில் தற்போது திமுக சார்பில் வேட்பாளராக நிற்கக்கூடிய தங்கப்பாண்டியன் கடந்த 10 ஆண்டுகளில் மக்களுக்கு வழங்கக்கூடிய ரேஷன் பொருட்கள் ரேஷன் அரிசி கடத்தி தனது அரிசி அலையில் பாலிஷ் போட்டு கேரளா மாநிலத்திற்கு கடத்தி விற்பனை செய்து வந்துள்ளார். மக்கள் விரோத செல்களில் ஈடுபட்ட வரை மக்கள் விரட்டி அடிப்பார்கள் என செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
இந்த செய்தியாளர் சந்திப்பில் பாரதிய ஜனதா கட்சி அதிமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



