• Mon. Apr 6th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

மாபெரும் இலவச கண் சிகிச்சை மருத்துவ முகாம்..,

Byமுகமதி

Apr 6, 2026

அறந்தாங்கி அருகில் அலஞ்சிராங்காடு என்னும் கிராமத்தில் மதுரை வேலம்மாள் மருத்துவமனை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் குருகுலம் உயர்நிலைப்பள்ளி இணைந்து நடத்திய மாபெரும் இலவச கண் சிகிச்சை மருத்துவ முகாம் குருகுலம் உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியை குருகுலம் உயர்நிலைப் பள்ளியின் தாளாளர் திரு.K. சிவநேசன் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். திரு. S ராஜ்கமல், பள்ளி நிர்வாக மேலாளர் அவர்கள் கண் சிகிச்சை முகாமை தொடங்கி வைத்தார்.

இதில் வேலம்மாள் மருத்துவமனையின் மருத்துவர்கள் டாக்டர். ஐஸ்வர்யா, டாக்டர். நவ்யா, டாக்டர்.புவனேஷ், CRRI டாக்டர். அக்ஷ்ய், டாக்டர். ஸ்ருதி ,மருத்துவ டெக்னீசியன் திரு .தமிழ்மணி ,கண் பரிசோதகர் MS. சிந்து, செவிலியர் சத்யா மற்றும் ஆப்டிகல் துறை சார்ந்த சுமதி அவர்கள் வருகை புரிந்து கண் பரிசோதனை,கண் புரை கண்டறிதல், விழித்திரை பிரச்சினைகளை கண்டறிந்து, சலுகை விலையில் கண் கண்ணாடி வழங்கினர்.

இதில் சுமார் 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஏராளமான மக்கள் கண் மருத்துவர் சிகிச்சை முகாமில் கலந்து கொண்டு பரிசோதனை செய்தனர். அதில் 10க்கு மேற்பட்ட நபர்கள் கண் அறுவை மேல் சிகிச்சைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு அன்று மாலையே மதுரை வேலம்மாள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
வேலம்மாள் மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் பிற ஊழியர்கள் அனைவரையும் பள்ளி நல மேலாண்மை அலுவலர் திருமதி .N பார்வதி அவர்கள் பாராட்டி சிறப்பு செய்தார். இறுதியாக பள்ளி முதல்வர் திருமதி. கவிதா ரவி நன்றி கூறினார்.