• Wed. Oct 7th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

சார் ஆட்சியர் அலுவலகத்தில் எஸ்பி அர்விந்த் திடீர் ஆய்வு..,

ByP.Thangapandi

Mar 30, 2026

உசிலம்பட்டியில் வேட்பு மனு தாக்கல் நடைபெறும் சார் ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் காவல்துறை பார்வையாளர் அஸ்வதி டோர்ஜே மற்றும் மாவட்ட எஸ்பி அர்விந்த்
திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 23 ந்தேதி வாக்குப்பதிவும் , வாக்கு எண்ணிக்கை மே 4 ந் தேதி நடைபெறுகிறது.

வேட்பு மனு தாக்கல் மார்ச்-30 ந் தேதி இன்று முதல் துவங்கி ஏப்ரல் 6 ந் தேதி முடிவடைகிறது.இதில் வேட்புமனு பரிசீலனை ஏப்ரல் 7 ந் தேதியும் வேட்பு மனு திரும்பப்பெற ஏப்ரல் 9 ந் தேதி நடைபெறுகிற சூழலில்,

அரசியல் கட்சியினர் மற்றும் சுயேச்சைகள் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்ற சூழலில்,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சார் ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் தொடக்க நாளான இன்று மாவட்ட தேர்தல் காவல்துறைப் பார்வையாளர் அஸ்வதி டோர்ஜே மற்றும் மதுரை மாவட்ட எஸ்.பி அர்விந்த் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

தொடர்ந்து ஆய்வு மேற்கொண்ட மாவட்ட தேர்தல் காவல்துறைப் பார்வையாளர் அஸ்வதி டோர்ஜே உசிலம்பட்டி சார் ஆட்சியர் உத்கர்ஷ் குமார்- ரிடம் வேட்பு மனு தாக்கல் நடைபெறுவது குறித்து பல்வேறு ஆலோசனைகளை கேட்டறிந்து சென்றார்.

தொடர்ந்து ஆய்வு மேற்கொண்ட மதுரை மாவட்ட எஸ்பி அர்விந்த் உசிலம்பட்டி டிஎஸ்பி ஷண்முகசுந்தரன் -ம் காவல்துறை பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து கேட்டறிந்து சென்றார்.