அரியலூர் அடுத்த கல்லங்குறிச்சியில் எழுந்தருளி உலகப் பிரசித்திப் பெற்ற கலியுக ஸ்ரீ வரதராசப் பெருமாள் கோயில் திருவிழா, ஆண்டு தோறும் இராம நவமி அன்று கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாள்கள் பெருந்திருவிழா நடை பெறுவது வழக்கம்.

அதன்படி நிகழாண்டுக்கான பெருந் திருவிழா நேற்று அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.கொடியேற்ற நிகழ்வில் கலியுக ஸ்ரீ வரத ராசப் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி முன்னிலையில் அலங்கரிக்கப்பட்ட கொடி கம்பத்தில், சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டு, கருடன் உருவம் பொறிக்கப்பட்ட கொடியை பட்டாச்சாரியார்கள் ஏற்றி கொடியேற்ற வைப வத்தை நடத்தி வைத்த னர்.அதனை தொடர்ந்து வரும் பத்து நாள்களிலும், பெருமாள் பல்வேறு வாகனங்களில் திருவீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

நாள்தோறும் மண்டபத்தில் சமய சொற்பொழிவுகள், இன்னிசை கச்சேரிகள், நாதஸ்வர நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.விழாவின் முக்கிய நிகழ்வுகளான 5 ஆம் திருவிழா , மார்ச் 31 ,வெள்ளி கருட சேவையும், திருக்கல் யாணம் (கண்ணாடி பல்லாக்கு) ஏப்.2 ஆம் தேதியும், தேரோட்டம் ஏப்.4 ஆம் தேதியும், ஏகாந்த சேவை நிகழ்வு ஏப்.5 ஆம் தேதியும் நடைபெறுகிறது.
விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளை கோயில் ஆதீன பரம்பரை தர்மகர்த்தாக்கள் கமலா ராமச்சந்திரன் படையாச்சியார், கோ.ராமதாஸ்படையாச்சியார், கோ.வெங்கடாஜலபதி படையாச்சியார், இராம.வரதராஜ்படையாட்சியார் குடும்பத்தினர் சிறப்பாக செய்து வருகின்றனர்.

இந்த விழாவுக்கு நாள்தோறும் பல்லாயிரகணக்கான பக்தர்கள் பல்வேறு
மாவட்டங்களில் இருந்து வருகை தருவார்கள் என்பதால் திருச்சி, அரியலூரில் இருந்து நாள் தோறும் கல்லங்குறிச்சி க்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப் படுகின்றன.




