• Wed. Mar 25th, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

நத்தம் தொகுதியில்  போட்டியிடும் நத்தம் விஸ்வநாதன்..,

ByVasanth Siddharthan

Mar 25, 2026

அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக)கழகத் துணைப் பொதுச் செயலாளர், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் 

பிறந்ததேதி: 11-12-1949

ஜாதி : சேர்வை (பட்டம்)- வல்லம்பர் 

கல்வி : பி.எஸ்.சி 

தொழில் : விவசாயம்

முன்னாள் அமைச்சரான இவர் தற்போது நத்தம் தொகுதி எம்.எல்.ஏவாக உள்ளார். 

1986-ஆம் ஆண்டு நத்தம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார் 1991 வரை பதவி வகித்தார்

1999ஆம் ஆண்டு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மெ. ஆண்டிஅம்பலம் மறைவிற்கு பின் நடைபெற்ற இடைத்தேர்தலில் முதல் முறையாக நத்தம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதைத்தொடர்ந்து 2001, 2006, 2011 ஆம் ஆண்டுகளிள் நடைபெற்ற 3 தேர்தல்களில் தொடர்ந்து நத்தம் தொகுதியில்  போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இக்காலகட்டங்களில் அன்றைய முதல்வர் ஜெ.ஜெயலலிதா தலைமையிலான ஆட்சி  காலங்களில்,

2001-2006 வரை போக்குவரத்துறை அமைச்சராகவும்,2011-2016 ஆண்டு ஜெ.ஜெயலலிதா,ஓ. பன்னீர்செல்வம்  தலைமையிலான தமிழக அரசின் மின்சாரம், மதுவிலக்கு மற்றும்  கலால்துறை அமைச்சராகவும் (மூன்று துறைகளுக்கு) செயல்பட்டார்.

அதன்பின் 2016 ஆம் ஆண்டு ஆத்தூர் தொகுதியில் திமுகவை சேர்ந்த  ஐ.பெரியசாமி எதிர்த்து போட்டியிட்டபோது 27147 வாக்குகள் வித்தியாசத்தில் நத்தம் விசுவநாதன்  தோல்வியை கண்டார்.

அதைத்தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட எம். ஏ ஆண்டி அம்பலத்தை 11,932 வாக்குகள் வித்தியாசத்தில் நத்தம் விஸ்வநாதன் வெற்றி பெற்று  தற்போது நத்தம் சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்து வருகிறார்.