• Wed. Mar 25th, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

ஸ்ரீ கருப்பர் சுவாமி ஆலய திரு குடமுழுக்கு விழா..,

ByS. SRIDHAR

Mar 25, 2026

புதுக்கோட்டை மாவட்டம் மச்சுவாடி தஞ்சை சாலையில் பலம்பெரும் எல்லை தெய்வமாக விளங்கக்கூடிய மன்னர் காலத்து ஸ்ரீ தடி கொண்ட அய்யனார் மற்றும் பூரண புஷ்கல சமேத கருப்பர் சுவாமி ஆலய திரு குடமுழுக்கு விழா மூன்றாம் முறையாக நடைபெற்றது.

அதற்கு முன்பாக ஸ்ரீ தடி கொண்ட அய்யனார் கோவில் அருகாமையில் வைக்கப்பட்ட யாகசாலையில் பல்வேறு புனித ஸ்தலங்களில் இருந்து எடுத்துவரப்பட்ட புனித கலச நீரை யாகத்தில் வைக்கப்பட்டு மூன்று கால பூஜைகள் நடைபெற்றது. முதல் கால பூஜை ஆனது கோமாதா பூஜை கணபதி ஹோமம் விக்னேஸ்வர பூஜை நடைபெற்று இன்று நிறைவு கால பூஜைக்கான லட்சுமி பூஜை பூர்ணகதி நடைபெற்ற முடிந்து

இந்நிகழ்ச்சியில் திருப்பனந்தாள் காசித்திருமடத்து22வது அதிபர் ஸ்ரீலஸ்ரீகாசிவாசி சபாபதித் தம்பிரான் சுவாமிகள் கலந்துகொண்டு யாகசாலையில் வைக்கப்பட்ட புனித கலசத்தை வேதாச்சாரியார்கள் தலையில் சுமந்தபடி வேத மந்திரங்கள் மேளதாளம் முழங்க கோயில் வளாகம் சுற்றி வந்து கருட பகவான் வட்டமிட்டு சரியாக 10:30 மணி அளவில் அடி கொண்ட அய்யனார் ஸ்ரீ கருப்பசாமி கோபுர கலசத்தில் புறப்பட்டதே தொடர்ந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் அதனைத் தொடர்ந்து மாபெரும் அன்னதானம் நடைபெற்றது.