• Wed. Jun 10th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

வம்பன் வீரமாகாளியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா..,

Byமுகமதி

Mar 25, 2026

புதுக்கோட்டை மாவட்டம் வம்பன் வீரமாகாளியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கோயில்கள் மற்றும் திருவிழாக்களில் பூச்சொரிதல் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டம் வம்பன் வீரமாகாளியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். வம்பன், மாஞ்சன் விடுதி, மழவராயன் பட்டி, கொத்தக்கோட்டை, காயாம்பட்டி ஆகிய ஊர்களை உள்ளடக்கிய குக்கிராமங்களைச் சேர்ந்த அனைத்து தரப்பு மக்களும் இணைந்து இந்த பூச்சொரிதல் விழாவை காலம் காலமாக நடத்தி வருகிறார்கள்.

அந்த வகையில் நேற்று இரவு நடைபெற்ற பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு அனைத்து ஊர்களில் இருந்தும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் பக்தர்கள் சேகரித்து அனுப்பிய மலர் வகைகளை கொண்டு வந்து நேர்த்திக்கடனாக பக்தர்கள் செலுத்தினர். மேலும் இப்பகுதியில் விழாக்கள் நடைபெறும் போது இரவு நிகழ்ச்சியாக நடத்தப்படும் கரகாட்ட நிகழ்ச்சியில் தமிழ்நாடு அளவில் பிரபலமான கலைஞர்களை அழைத்து வந்து கரகாட்டம் நடத்துவதும் பழக்கம். அந்த வகையில் நேற்று நான்கு இடங்களில் கரகாட்ட நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது.