சோழவந்தான் ஜெனகைமாரியம்மன் கோவில் மூன்றுமாத கொடியேற்றம் விழா நடந்தது. பக்தர்கள் குவிந்தனர். மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் மிகவும்பிரசித்தி பெற்ற கோவிலில் ஒன்றாகும்.

இங்கு வருடந்தோறும் வைகாசி அமாவாசைக்குப் பின்னர் வரும் திங்கட்கிழமை திருவிழா கொடியேற்றம் நடைபெறும் . இதைத்தொடர்ந்து 17 நாட்கள் திருவிழா சிறப்பாக நடைபெறும். இதற்கு முன்பாக பங்குனி மாத அமாவாசைக்குப் பின்னர் வரும் திங்கட்கிழமை சுற்றுப்புற கிராம பக்தர்களுக்கு திருவிழா நடத்துவதற்கு முன்பாக அறிவிப்பாக மூன்று மாத கொடியேற்று விழா நடைபெறும்.
இதேபோல் இந்த ஆண்டு திருவிழா ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.இதற்கான 3மாத கொடியேற்று விழா நேற்று இரவு நடந்தது. நேற்று மாலை வான வேடிக்கை மேளதாளத்துடன் சண்முகவேல் அர்ச்சகர் மூன்று மாத கொடிக்கம்பத்தை எடுத்து வந்தார் இவருடன் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பின் தொடர்ந்து வந்தனர். சில பக்தர்கள் சாமியாடி வந்தனர்.இந்த மூன்று மாதக் கொடி கம்பம் எடுத்துக் கொண்டு கடைவீதி,தெற்குரதவீதி,மேலரதுவீதி, வழியாக வைகைஆற்றுக்குச் சென்று அங்கு மூன்று மாத கம்பத்தை வைத்து பூஜைகள் நடந்தது.

இதைத் தொடர்ந்து வடக்குரதவீதி,கடைவிதி, மாரியம்மன்சன்னதி வழியாக கோவிலைவந்தடைந்தனர். கோவில் முன்பாக உள்ள மூன்று மாத கொடிபீடத்தில் மூன்று மாதகொடி ஏற்றும் விழா நடந்தது.பூஜைகள் நடைபெற்று பிரசாதம் வழங்கப்பட்டது.செயல் அலுவலர் ராஜா, கோவில் பணியாளர்கள் பூபதி, கவிதா, வசந்த் ,சுபா, பெருமாள் மற்றும் உபயதாரர் சோழவந்தான் காவல் ராசுஅம்பலம் குடும்பத்தினர் ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர். சோழவந்தான் மற்றும் இதனை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து பக்தர்கள் குவிந்தனர். சோழவந்தான் இன்ஸ்பெக்டர் சந்திரன், சப் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடு செய்தனர்.
நேற்று காலை மூன்று மாத கொடியேற்றுவதற்கான கொடிமரம் இங்குள்ள அக்கசாலை விநாயகர் கோவிலில் தயார் செய்யப்பட்டது. இந்த கொடி மரத்திற்கு மாலை அணிவித்து மேளதாளத்துடன் ஊர்வலமாக எடுத்து விஸ்வகர்மா ஐந்து தொழில் ஆசாரியார்கள், கிராம பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கோவிலுக்கு கொண்டு வந்தனர். கோவிலில் இந்த கொடி மரத்திற்கு பூஜை நடந்தது. இதில் பேரூராட்சி தலைவர் ஜெயராமன், பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர், வார்டு கவுன்சிலர்கள் செந்தில், குருசாமி, கோவில் செயல் அலுவலர்கள் திருவேடகம் இளமதி, பல்லடம் சரவணன், எல்ஐசி கதிரேசன் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.




