அரசு டவுன் பஸ்ஸில் ஏறும்போது ஏற்பட்ட தகராறு காரணமாக, நூற்பாலை எலக்ட்ரீசினை கத்தியால் குத்திய வாலிபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள எரியோட்டை சேர்ந்தவர் கணபதிராஜ் (வயது50). வேடசந்தூரில் கரூர் சாலையில் உள்ள ஒரு தனியார் நூற்பாலை எலக்ட்ரீசியனாக பணியாற்றி வருகிறார்.

வேடசந்தூரில் இருந்து சிங்கிலிக்காம்பட்டி செல்லும் அரசு டவுன் பஸ்சில் கணபதிராஜ் ஏறியுள்ளார்.
அப்போது கூட்டம் காரணமாக, முண்டியடித்து ஏறுவதில், இவருக்கும் வி.குரும்பபட்டியைச் சேர்ந்த சிவநாதன் (வயது 20) என்ற
வாலிபருக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.
கணபதிராஜ் பஸ்ஸில் ஏறிய நிலையில், கூட்டத்தில் மேலே உள்ள கம்பியை பிடித்துக் கொண்டு நின்றுள்ளார். அப்போது தகராறில் ஈடுபட்ட வாலிபர் சிவநாதன் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, கணபதிராஜின் கையின் கீழ்ப்பகுதியில் இரு இடங்களில் குத்தினார்.
ரத்தம் கொட்டிய நிலையில், சுற்றி இருந்த மக்கள் கத்தியால் குத்திய வரை பிடித்துக் கொண்டனர். ரத்த காயம் அடைந்தவருக்கு பஸ்ஸில் வந்திருந்த ஒரு இளம் பெண் தனது சுடிதாருக்கு உண்டான சாலை எடுத்து கொடுத்து, ரத்தம் வடியாமல் இருக்கும் வகையில் இறுக்கி கட்டி உள்ளனர்.
அதன் பிறகு கணபதிராஜ் அவரை கத்தியால் குத்திய சிவநாதன் ஆகியோரை உடன் இருந்த பயணிகள் வேடசந்தூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று ஒப்படைத்தனர்.
போலீசார் கத்திக்குத்து காயம் பட்ட கணபதிராஜ் வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து வேடசந்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசமூர்த்தி வழக்குப்பதிவு செய்து வாலிபர் சிவனாதனை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்.




