திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள சோனையகவுண்டன்பட்டியை சேர்ந்த விவசாயி முருகேசன்(வயது 27) அவரது தாயார் ஒச்சம்மாள்(வயது 47) இவரது கணவர் கருப்பையா(வயது 53) ஆகியோர் சொட்டமாயனூரில் உள்ள தங்களுக்கு சொந்தமான விவசாய நிலத்தில் கிணறு தோண்டும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த 10-க்கும் மேற்பட்டோர் நிலத்தை அபகரிக்கும் நோக்கில் வாய் தகறால் ஈடுபட்டு தகராறு முட்டியதில் அரிவாளால் முருகேசனை வெட்டினர், தடுத்த ஒச்சமாளை கடப்பாரையால் தாக்கியும், கருப்பையாவை கத்தியால் குத்திவிட்டு அந்த கும்பல் அங்கிருந்து தப்பிசென்றனர்.
படுகாயம் அடைந்த 3 பேரும் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து எரியோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




