• Fri. Jul 10th, 2026
WhatsAppImage2026-07-03at000327
previous arrow
next arrow
Read Now

வேடசந்தூர் அருகே பைக் மீது லாரி மோதி கொத்தனார் பலி.!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள தேவநாயக்கன்பட்டியை சேர்ந்த கொத்தனார் மாரிமுத்து(வயது 45) இவர் தனது பைக்கில் வேடசந்தூரில் காளனம்பட்டி செல்லும் சாலையில் ஒரு தனியார் திருமண மண்டபம் முன்பு சாலையின் வளைவில் சென்று கொண்டிருந்த போது மதுரையை சேர்ந்த குணசேகரன்(வயது 61) என்பவர் ஓட்டி வந்த லாரி பைக் மீது மோதியது

இதில் மாரிமுத்து தூக்கி வீசப்பட்டு தரையில் விழுந்து படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கு சிகிச்சை பலனின்றி மாரிமுத்து உயிரிழந்தார்.

இது குறித்து வேடசந்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசமூர்த்தி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.