• Sun. Jul 26th, 2026
WhatsAppImage2026-07-23at2343124
previous arrow
next arrow
Read Now

வாடிப்பட்டி பகுதியில் வாக்குச் சாவடிகளில் தேர்தல் பார்வையாளர்கள் ஆய்வு..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியில் சட்டமன்ற தேர்தல் வாக்கு சாவடி மையங்கள் தாதம் பட்டி அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி, பொட்டுலுபட்டி காந்திஜி ஆரம்பப்பள்ளி, மேட்டு நீரேத்தான் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி,பெருமாள் பட்டி அரசு பள்ளிகளில் உள்ள பதட்டமான வாக்குச்சாவடி மற்றும் சிறப்பு வாக்குச்சாவடிகளை போலீஸ் தேர்தல் பார்வையாளர் அஸ்வதிதோர்தே நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

உடன் சமயநல்லூர் போலீஸ் துணை சூப்பிரண்டு ஆனந்தராஜ், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கிரேசி சோபியா பாய், கணேசன், வருவாய் ஆய்வாளர் கௌதம் குமார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் வந்திருந்தனர். அதேபோல் தேர்தல் பொது பார்வையாளர் வேதபதி மிஸ்ரா தாதம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, திருவால வாயநல்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையங்கள் மற்றும் வாடிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் உள்ள வாக்கு பெட்டி வைப்பு அறைககளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

உடன் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை அதிகாரி சண்முக வடிவேல், உதவி தேர்தல் அதிகாரி தாசில்தார் ராமச்சந்தி ரன்,மற்றும் மண்டல துணை தாசில்தார் செந்தில்குமார், தேர்தல் துணை தாசில்தார் கருப்பையா, வருவாய் ஆய்வாளர் கௌதம் குமார் ஆகியோர் இருந்தனர்.