• Wed. Oct 7th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

சூறைக்காற்றுடன் பெய்த ஆலங்கட்டி மழையால் பயிர்கள் உதிர்ந்து நாசம்..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியில் நேற்று முன்தினம் 7 மணிக்கு சூறைக்காற்று வீசி இடியுடன் கூடிய பலத்த மழை கொட்டி தீர்த்தது. இந்த மழையின் போது பல இடங்களில் ஐஸ்கட்டிகள் விழுந்தது.

இதனால் ஆண்டிபட்டி தும்பிச்சம்பட்டி சின்னம்மநாயக் கன்பட்டி வடுகபட்டி கட்டக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் அறுவடைக் கு தயாராக இருந்த நெல் வயல்க ளில் நெல் உதிர்ந்தது. இதனால் வயல் முழுவதும் வைக்கோல் போல் காட்சியளித்தது.இதற்கு பேரிடர் நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

இது பற்றி தகவல் அறிந்த வேளாண்மை உதவி இயக்குனர் பாண்டி தலைமையில் வேளாண்மை உதவி அதிகாரிகள் சேதமடைந்த வயல்வெளியில் சென்று நேரில் பார்வைவையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் வாடிப்பட்டி நகர் பகுதியை தவிர்த்து கிராமப்புறங்களில் பல இடங்களில் ஏராளமான மரங்கள் விழுந்ததால் தொடர் மின்தடை ஏற்பட்டு ஒவ்வொன்றாக சீரமைக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.