• Fri. Sep 18th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 80,000 பறிமுதல்..,

ByS.Ariyanayagam

Mar 18, 2026

திண்டுக்கல்லில் உரிய ஆவணங்கள் இன்றி ஜீப்பில் கொண்டு செல்லப்பட்ட ரூ.80 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

திண்டுக்கல், சிலுவத்தூர் ரோடு, காட்டுமடம் பகுதியில் கணேசன் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியாக வந்த தார் ஜீப்பை நிறுத்தி சோதனை மேற்கொண்ட போது காரை ஓட்டி வந்த தண்டபாணி என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.80 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்து திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சுல்தான் சிக்கந்தர் அவர்களிடம் தேர்தல் பறக்கும் படையினர் ஒப்படைத்தனர்.

இதனைத் தொடர்ந்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சுல்தான் சிக்கந்தர் பணத்தை கருவூலத்தில் ஒப்படைத்தார்.