• Sun. Aug 23rd, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

காரைக்காலில் திடீரென பற்றி எரிந்த காரால் பரபரப்பு..,

ByM.I.MOHAMMED FAROOK

Mar 17, 2026

காரைக்கால் கோட்டுச்சேரி பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் தனது குடும்பத்தினருடன் காரைக்காலில் இருந்து காமராஜர் சாலை வழியாக கோட்டுச்சேரி சென்று கொண்டிருந்தபோது காமராஜர் சாலை ரயில்வே கேட்டிற்கு முன்னதாக உள்ள பெட்ரோல் பங்க் மற்றும் கேஸ் குடோன் இடையே காரில் இருந்து புகை வந்தது எடுத்து சுதாரித்துக் கொண்ட மணிகண்டன் தனது குடும்பத்தினருடன் காரில் இருந்து கீழே இறங்கினார்.

      கீழ இறங்கி பார்த்தபோது அதிகமாக புகை வந்ததோடு, திடீரென காரின் முன் பகுதி பற்றி எரியத் தொடங்கியது. இதனை எடுத்து செய்வது அறியாத திகைத்த மணிகண்டன் அருகில் இருப்பவர்களை உதவிக்கு அழைத்தார். பதறிப் போன பெட்ரோல் பங்க் ஊழியர்கள் தீயணை பானை கொண்டு தீயணை கட்டுப்படுத்த முயற்சி செய்தனர் இதற்கு இடையில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறை வீரர்கள் மூன்று ஓஸ்களில் தண்ணீரை எரிந்து கொண்டிருக்கும் கார், பெட்ரோல் பங்க் மற்றும் கேஸ் குடோன் ஆகியவற்கு தண்ணீரை பீச்சு அடித்து காரில் இருந்து தீ வேறு எங்கும் பரவாத வகையில் தீயினை கட்டுப்படுத்தினர். இதில் காரின் உட்பகுதி முழுவதும் எரிந்து சேதம் ஆனது. காரை ஓட்டி வந்த மணிகண்டன் சாதுரியமாக செயல்பட்டதால் காரில் இருந்த மூவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த தீ விபத்து சம்பவம் காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

 காரைக்கால் காமராஜர் சாலையில் கேஸ் குடோனுக்கு அருகே பெட்ரோல் பங்க் அமைக்க அப்போதே பெரும் எதிர்ப்புகள் வந்த நிலையில் தற்போது தேசியக்கொடியின் அருகிலேயே இந்த பெட்ரோல் பங்கும் செயல்பட்டு வருகிறது. காரில் பற்றிய தீ அருகில் இருந்த கேஸ் குடோனிலோ பெட்ரோல் பங்கிலோ சிறு துளி பட்டு இருந்தாலும் பெரும் விபத்து ஏற்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.