• Sun. May 3rd, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

தமிழகத்தை கடன் நிறைந்த மாநிலமாக திமுக மாற்றி விட்டது – கே.டி. இராஜேந்திர பாலாஜிபேச்சு..,

விருதுநகர் தேசபந்து மைதானத்தில் தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கம் மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் கே.டி இராஜேந்திர பாலாஜி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

இந்த ஆர்பாட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்த பாஜக பாமக தமிழ் மாநில காங்கிரஸ் அமமுக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்

இந்த ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் திமுகவிற்கு எதிராக கண்டன கோஷம் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் கே.டி இராஜேந்திர பாலாஜி பேசிய போது, திமுக ஆட்சியின் அவலம் இன்றும் தொடர்வதாகவும் அதிமுக நிர்வாகிகள் மக்கள் மகிழ்ச்சி அடைய கூடிய தேர்தல் இது திமுகவிற்கு முடிவுரை எழுத மக்கள் தயாராகி உள்ளார்கள் என்றார்.

மேலும் ஒரு சதவிதம் அரை சதவிதம் வாக்கு வங்கி உள்ள 21 கட்சிகளை கூட்டணி வைத்து உள்ளார்கள் எனவும் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் 46% வாக்கு வங்கி உள்ளது என்றார்.

மேலும் தமிழகத்தில் அனைத்து பகுதியிலும் பாலியல் வன்கொடுமை நடப்பதாகவும் இதில் திமுக நிர்வாகி கள் முக்கிய குற்றவாளிகளாக உள்ளார்கள் என குற்றம்சாட்டினார்.

மேலும் அதிமுக ஆட்சியில் கொண்டு வந்து உள்ள திட்டங்கள் அனைத்தும் தற்போது ரத்து செய்யப்பட்டு விட்டது அனைத்தும் வரிகள் உயர்ந்து விட்டதாகவும் தமிழகத்தை கடன் நிறைந்த மாநிலமாக திமுக மாற்றி விட்டது என்றார்.

தொடர்ந்து திமுக ஆட்சியில் கொலை கொள்ளை பாலியல் வன்கொடுமை இவற்றில் இருந்து விடுபட அதிமுக கூட்டணி ஆட்சிக்கு வர வேண்டும் எனவும் அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் விலைவாசி குறைக்கப்படும் என்றார்.