• Sun. Mar 15th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ்ச்செல்வன் பேட்டி..,

ByP.Thangapandi

Mar 15, 2026

இன்று மாலை தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என அதிகார பூர்வ அறிவிப்புகள் வெளியான சூழலில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேவர் சிலை அருகே வத்தலக்குண்டு பேருந்து நிறுத்தத்தில் புதிதாக சுமார் 15 லட்சம் மதிப்பீட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட பயணிகள் நிழற்கூடையை தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ்ச்செல்வன் திறந்து வைத்து மக்களுக்கு இனிப்புகளை வழங்கி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ்ச்செல்வன்.,

இன்று மாலை திறப்பதாக இருந்ததை தேர்தல் தேதி அறிவிப்பு காரணமாக மதியமே திறந்து வைத்தேன்.

தமிழ்நாடு முதல்வர் மின்சார அடுப்பு வாங்குவதற்கு மானியமாக ஒரு கோடி வரை கடன் கொடுத்து வாங்கி வைக்க சொல்கிறார். யூனிட் க்கு 2 ரூபாய் தள்ளுபடி செய்கிறார் இதை தான் செய்ய முடியும்.

மத்திய அரசு என்ன செய்ய வேண்டுமென்றால் இன்று 100 சிலிண்டர் வேண்டும் ஆனால் கையிருப்பு இல்லை, அதற்கு விளக்கம் கேட்டால் செய்வோம் செய்வோம் என்றே பிரதமர் சொல்கிறார்., எப்படி செய்வார் பதுக்கி வைத்திருக்க வேண்டும் அல்லது எங்காவது விலைக்கு வாங்கி இறக்குமதி செய்ய வேண்டும் எதுமே இல்லை.

சிலிண்டர் தட்டுப்பாடு வர காரணம் என்ன என்றால் போர் காரணமாக கப்பல் வழியாக தான் இறக்குமதி செய்ய வேண்டும் அதற்குண்டான நடவடிக்கைகளை மத்திய அரசு செய்ய வேண்டும், அதை பாஜக அரசு கையில் எடுக்கவில்லை.

தேர்தல் தேதி வந்துவிடும் என்பதற்காக கேரளாவிலும், திருச்சிக்கும் பிரச்சாரத்திற்கு போகும் பிரதமர் மோடி டீசல் தட்டுப்பாட்டை கண்டு கொள்ளாமல் விட்டதால் மக்கள் திட்டாட்ட படுகின்றனர்., அதை கண்டித்து தமிழ்நாடு முதல்வர் இன்று ஆர்ப்பாட்டமும் நடத்தியுள்ளார்.