நாட்டில் முதல் முறையாக உயர்நிலை தொழில்நுட்ப இயந்திரமான இன்டர்வென்ஷனல் கதிர்வீச்சியல் துறையில், அதிநவீன செயல் திறன் கொண்ட புதிய, பிலிப்ஸ் அசுரியன் 3.0 பை, பிளேன் கேத் லேப் துவங்கப்பட்டுள்ளது.

இதனை ராயல் கேர் மருத்துவமனையின் தலைவரும் நிர்வாக இயக்குனருமான டாக்டர் மாதேஸ்வரன் முன்னிலையில், கோவை மாவட்ட வருமான வரி முதன்மை ஆணையர் அருண் சி பாரத், ரிப்பன் வெட்டி துவங்கி வைத்தார். தொடர்ந்து இம்மையத்தின் செயல்பாடுகள், இப்புதிய கருவியின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியின் வாயிலாக, கலந்து கொண்ட அனைவரது மத்தியிலும் இக்கருவி குறித்து மருத்துவர் மாதேஸ்வரன் கூறியதாவது..
தற்பொழுது நிறுவப்பட்டுள்ள இக்கருவி மருத்துவப் பணியாளர், மற்றும் நோயாளிகளின் மீதான கதிர்வீச்சு பாதிப்பை 50 சதவிகிதம் குறைகிறது எனவும், துல்லியமான, மற்றும் தெளிவான உயர்தர படங்களை வழங்குகிறது எனவும், தீவிர சிகிச்சை நோயாளிகளை சிடி ஸ்கேன் அறைக்கு மாற்ற வேண்டியதை தவிர்க்கிறது எனவும், அறுவை சிகிச்சைக்கு முன்பாக நேரடியாக ஸ்கேனை எக்ஸ்ரே கருவியுடன் இணைத்து, முப்பரிமான படத்தை வழங்குகின்றது,

இந்த படத்தின் வழிகாட்டுதல், துல்லியமாக அதிகரிப்பதோடு மருத்துவர்களுக்கான தெளிவையும் வழங்குகின்றது என தெரிவித்தார். மனிதனின் கண்களை விட, 39 சதவிகிதம் துள்ளியமாக, புற்று நோய்க்கு செல்லும் ரத்தநாளத்தை தானாக கண்டறிகின்றது எனவும், மேம்படுத்தப்பட்ட முறையில் நரம்புகளை அறிதல், பக்கவாதம், மூளை ரத்தநாள வீக்கம், போன்ற சிகிச்சைகளுக்கு உதவுகின்றதாக தெரிவித்தார்.
சிறுநீரக பாதிப்பு, சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு கால் வழியாக செலுத்தப்படும் செறிவூட்டல் மருந்தின் அளவை இக்கருவி குறைக்கிறது எனவும், ரத்தநாளங்களில் உள்புறமும், வெளிப்புறமும், பைபர் ஆப்டிக் முறையில், காண நவீன தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் வசதியை கொண்டுள்ளதாக தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில், மருத்துவமனையைச் சார்ந்த பல்வேறு துறை மருத்துவர்கள், ஊழியர்கள், தொழிலதிபர்கள், மற்றும் பொதுமக்கள், என பலரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.



