• Sun. Jun 21st, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

புதுக்கோட்டையில் கோலாகலமாகத் தொடங்கிய பாரம்பரிய உணவுத் திருவிழா…

ByS. SRIDHAR

Mar 14, 2026

புதுக்கோட்டை நகரில் ரோஸ் (ROSE) தன்னார்வத் தொண்டு நிறுவனம் மற்றும் புதுக்கோட்டை இயற்கை விவசாய உற்பத்தியாளர் நிறுவனம் இணைந்து நடத்திய “பாரம்பரிய உணவுத் திருவிழா – 2026” இன்று மிகச் சிறப்பாகத் தொடங்கியது.

​நவீன உலகில் மின்சாரம், எரிபொருள் மற்றும் ரசாயனக் கலப்பில்லாத இயற்கை வாழ்வியலை மீட்டெடுப்பதே இந்த விழாவின் முக்கிய நோக்கமாகக் கருதப்படுகிறது. “நம் உணவுப் பாரம்பரியத்தைக் கொண்டாடுவோம்” என்ற முழக்கத்துடன், மாறிவரும் காலநிலைக்கு ஏற்றவாறு நம் உடலைத் தற்காத்துக் கொள்ளும் வழிமுறைகளை இளைய தலைமுறைக்குக் கொண்டு செல்ல இந்தத் திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மின்சாரம் மற்றும் எரிவாயு இன்றி, இயற்கை முறையில் சமைக்காத உணவுகளை தயாரிக்கும் முறைகள் குறித்த நேரடிப் பயிற்சி அளிக்கப்பட்டது.

​ 60 முதல் 70 ஆண்டுகளுக்கு முன்பு நமது முன்னோர்கள் கையாண்ட சமையல் முறைகள், உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் வாழ்வியல் முறைகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

மற்றும் பாரம்பரிய நெல் ரகங்கள், சிறுதானியங்கள் மற்றும் இயற்கை விவசாய இடுபொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் இயற்கை உணவுகளைக் கண்டு வியந்து, அதன் நன்மைகளைக் கேட்டறிந்தனர்.

​இந்த உணவுத் திருவிழாவில் ஏராளமான பெண்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.