• Mon. Aug 3rd, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

அமெரிக்கா, மற்றும் இஸ்ரேலை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்..,

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் போர் தொடுத்ததை கண்டித்து விருதுநகர் தேச பந்து மைதானத்தில் நேற்று மாலை அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டு கழகம், தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம்,தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் இந்திய கலாச்சார நட்புறவு கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு எஸ். பழனிக்குமார், மாவட்ட தலைவர் அ.இ.ச.ஒ.கழகம. இரா.முத்துராஜ், மாவட்ட செயலாளர் அ.இ.ச.ஒ கழகம் தலைமை தாங்கினார்கள். எம். எஸ்.சதீஷ்குமார் ராஜா மாவட்ட தலைவர், இந்திய கலாச்சார நட்புறவு கழகம், பெ. ரவீந்திரன், மாவட்ட தலைவர், வ நவநீத கிருஷ்ணன்,மாவட்ட செயலாளர், த.க.இ.பெருமன்றம், முன்னிலை வகித்தனர்.

இந்த கண்டன ஆர்ப்பாட்ட சிறப்பு அழைப்பாளராக மருத்துவர் த. அறம்,மாநில பொது செயலாளர், கலந்து கொண்டு விளக்கவுரை ஆற்றினார். இவர்களுடன் கண்மணி ராசா,நந்தன் கனகராஜ், எஸ்.காமராஜ், பா.அசோக், அன்னக்கொடி,மதிக்கண்ணமற்றும் பலர் கலந்து கொண்டனர்.