• Mon. Mar 9th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

இருசக்கர வாகன மோதியதில் விபத்து..,

ByKalamegam Viswanathan

Mar 9, 2026

மதுரையில் இருந்து திருமங்கலம் செல்லக்கூடிய சாலையில் நேற்று நள்ளிரவில் தென்பழஞ்சியை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக திருப்பரங்குன்றம் ரயில்வே சுரங்கப்பாதை அருகே சென்று கொண்டிருந்தபோது முன்னே சென்ற இருசக்கர வாகனத்தை முந்தி செல்லும்போது சாலையின் நடுவே இருந்தா சென்டர் மீடியன் கல் மீது இருசக்கர வாகன மோதி பல்டி அடித்து விழுந்தது.

இதில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த இளைஞர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது அருகில் இருந்தவர்கள் அந்த சாலையை பயன்படுத்திய வாகன ஓட்டிகள் அவருக்கு தண்ணீர் கொடுத்து அவரை அங்கேயே அமர வைத்து 108 ஆம்புலன்ஸ்க்கும் காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். ஆனால் ஆம்புலன்ஸ் காவல்துறையினர் வருவதற்கு முன்பே அந்த இளைஞர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

இருசக்கர வாகனத்தை இயக்கி வந்த இளைஞர் யார் என்பதும் மேலும் அவர் மது போதையில் விபத்தில் சிக்கினார் என்பது போலீசாரின் விசாரணையில் தெரியவரும்