• Wed. Aug 5th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

நீட் தேர்வுக்கு தயாராகி வந்த டாஸ்மாக் சங்க நிர்வாகியின் 19 வயது மகள் அனு கீர்த்தனா தற்கொலை..!

BySeenu

Jun 17, 2026

ஏற்கனவே நீட் தேர்வில் பயிற்சி பெற்று BDS கிடைத்திருந்த நிலையில் MBBS படிப்பதற்காக மீண்டும் நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற நீட் தேர்வு வினாத்தாள் கசிவால் ரத்து செய்யப்பட்டு வரும் 21 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது.

அந்தத் தேர்வுக்கு மாணவி தயாராகி வந்த நிலையில் மன உளைச்சல் காரணமாக நள்ளிரவு வலி நிவாரணி மருந்து குடித்து உயிரிழப்பு

மாணவியின் உயிரிழப்புக்கு நியாயம் கேட்டும் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் மாணவியின் குடும்பத்திற்கு இழப்பீடு கோரியும் கோவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட குழு சார்பில் ஆர்ப்பாட்டம நடைபெற்று வருகின்றது

ESI மருத்துவமனை வளாகத்தில் திரண்டு வருகின்றனர்.

சுமார் 100 பேர் ஆர்ப்பாட்டத்திற்கு திரண்டு உள்ளனர்.

ESI மருத்துவமனையில் காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

சுமார் 100 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ESI மருத்துவமனை வளாகத்திற்குள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்

உயிரிழந்த மாணவியின் புகைப்படத்தை கையில் ஏந்தியவாறு முழக்கங்கள்

CPIM கோவை மாவட்ட செயலாளர் பத்மநாபன் உள்ளிட்ட கம்யூனிஸ்ட் மாவட்ட குழுக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மத்திய கல்வி அமைச்சரை கண்டித்தும் முழக்கங்கள்

உடலை வாங்க மாட்டோம் என முழக்கம்.