மதுரை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட 58 ஆவது வார்டு ஆரப்பாளையம் பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது. இதில் ,தினசரி சுமார் பல ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர்.

குறிப்பாக , கொங்கு மண்டலம் மற்றும் கேரளாவை எங்கிருந்துதான் பேருந்துகள் இயக்கப்படுகிறது. கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் புற காவல் நிலையம் அருகே மூடிய நிலையில் கழிவறை ஒன்று இருக்கிறது. இதிலிருந்து மனித கழிவுகளுடன் கழிவு நீரானது வெளியே சாலையில் ஆறு போல ஓடுகிறது இது குறித்து மாநகராட்சி அதிகாரியிடம் தகவல் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என, அப்பகுதி வியாபாரிகளும் பொதுமக்களும் பயணிகளும் குற்றச்சாட்டை முன்வைக்கின்றது.

மேலும், அருகே உள்ள உணவகங்களில் இதில் ஈக்கள் உட்கார்ந்து உணவுகளை உட்காருவதால் நோய் தொற்று ஏற்படுவதாக உணவு விடுதி உரிமையாளர்கள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றன. மேலும் , புதிதாக கட்டப்பட்டுள்ள கழிவறையை திறக்க விடாமல் ஆளுங்கட்சியை சேர்ந்த சேர்ந்தவர் ஒருவர் தடுப்பதாகவும் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். இந்த துர்நாற்றம் அடிக்கும் நிலையிலும் மாநகராட்சி உறங்குகிறது என, பொதுமக்கள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றன. மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்குமா, பயணிகளின் நோய் தொற்றிலிருந்து பாதுகாப்பை உறுதி செய்யுமா என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.




