• Fri. Jun 19th, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

மதுரை – திண்டுக்கல் ரெயில்வே பாதையில் புதிய தண்டவாளம் பொருத்தும் பணிகள்..,

ByKalamegam Viswanathan

Mar 8, 2026

மதுரை – சென்னை மார்க்கம் செல்லும் ரெயில் பாதை அமைக்கப்பட்டுள்ளன. இந்த ரெயில் பாதையில் மதுரையில் இருந்து திண்டுக்கல் வரை ரெயில் பழைய தண்டவாளங்கள்,சிமெண்ட் ஸ்லீப்பர் கட்டைகள் அகற்றிவிட்டு, உடனே அதே இடங்களில் புதிய ரயில்வே தண்டவாளங்கள் சிமெண்ட் ஸ்லீப்பர் கட்டைகள் பொருத்துப் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

மதுரையில் இருந்து சோழவந்தான், கொடைரோடு வரை பழை ரெயில்வே தண்டவாளங்கள், ஸ்லீப்பர் சிமெண்ட் கட்டைகள் மாற்றும் பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் ரெயில்வே தண்டவாளம் மாற்றப்பட்ட இடங்களில் ஜல்லி கற்கள் கொட்டி சீர் அமைக்கும் பணிகள் நடக்கிறது.

ஆனால் கொடைரோடு – நிலக்கோட்டை செல்லும் சாலை ரெயில்வே மேம் பாலம் இருக்கிறது. அந்த மேம்பாலத்தில் மேல் தண்டவாளங்கள் புதியதாக பொருத்தப்பட்டுள்ளது. இந்த மேம்பாலத்தில் ஜல்லி கற்களை தண்டவாளங்கள் இடையே ஓரத்திலும் சீரமைக்க ஜே.சி.பி. எயந்திதை பயன் படுத்தி பணிகள் மேற்க கொண்டனர்.

அப்போது ரெயில்வே மேம்பாலத்தில் இருந்து கீழே சாலையில் வாகன ஓட்டிகள், மோட்டார் சைக்கிள், நடந்து செல்லும் மக்கள் மீது ஜல்லி கற்கள் விழுந்து ஆபத்தான நிலையில் பணிகள் நடக்கிறது என பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.
ரெயில்வே மேம்பாலத்தில் வேலை செய்யும் போது கீழே சாலையில் பாதுகாப்பு இல்லாமல் பணிகள் நடக்கிறது. அம்மையநாயக்கனூர் ரெயில்வே மேம்பாலத்தில் வேலை செய்யும் போது சாலையில் கடந்தும் மக்களுக்கு பாதுகாப்பு ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.