• Fri. Jun 19th, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

கண்ணீர் செல்வம் என்பவர் செல்லாத நோட்டு, ரிசர்வ் பேங்கில் இருந்தா என்ன. ஸ்டேட் பேங்கில் இருந்தால் என்ன..,

ByKalamegam Viswanathan

Mar 8, 2026

சர்வதேச மகளிர் தின விழா மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மதுரை பசுமலையில் திருப்பரங்குன்றம் எம் எல் ஏ ராஜன் செல்லப்பா தலைமையில் நடைபெற்றது.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில் ;-

ஓபிஎஸ் குறித்த கேள்விக்கு? கண்ணீர் செல்வம் என்பவர் செல்லாத நோட்டு ரிசர்வ் பேங்கில் இருந்தா என்ன. ஸ்டேட் பேங்கில் இருந்தால் என்ன.

எடப்பாடி அனைத்து தடைகளையும் நீக்கி வெற்றியை நோக்கி சென்று கொண்டிருக்கிறார். தோல்வி ஏற்படுத்தியவர்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளார்கள்.

இந்த ஆண்டு மிகப்பெரிய ஜோக்.. நேர்மையானவர் விசுவாசமானவர் என்று முதல்வர் ஸ்டாலின் அவர்கள் சொன்னது மிகப்பெரிய ஜோக்.

விஜய் மகளிர்களுக்கான வாக்குறுதி குறித்த கேள்விக்கு?

ஆட்சிக்கு வரப்போகுது அதிமுக, அதன் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்.

நிதீஷ்குமார் நிலைதான் எடப்பாடி பழனிச்சாமிக்கு என கூறுவது குறித்த கேள்விக்கு?

கேலியாக சொன்னாலும் அதிமுக தான் ஆட்சிக்கு வரப்போகிறது முதல்வராக போகிறார் என்பதை தான் மறைமுகமாக சொல்லி இருக்கிறார்கள்.

எடப்பாடி பழனிச்சாமி ராஜதந்திரி எந்த நேரத்தில் யாரை பயன்படுத்தி அதிமுகவை கட்டிக் காக்க வேண்டும் என நன்கு தெரிந்தவர்கள். யாரிடமும் ஏமாற மாட்டார்.