• Sun. Apr 26th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

திமுகவில் இணைந்த அதிமுக உரிமை மீட்பு குழுவினர் சுமார் 750 பேர்..,

ByKalamegam Viswanathan

Mar 8, 2026

மதுரை மாவட்டம் மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தாராப்பட்டி கீழ மாத்தூர் பகுதியில் உள்ள அதிமுக ஓபிஎஸ் தலைமையிலான அதிமுக உரிமை மீட்பு குழுவினர் மாநகர் மாவட்ட விவசாய அணி நிர்வாகியும் கொடிமங்கலம் முன்னாள் கூட்டுறவு சங்க தலைவருமான தாரப்பட்டி முத்தையா தலைமையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையை ஏற்று தாராப்பட்டி கிளைக் கழகத்தினர் இணைந்தனர்.

முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தலைமையில் திருமங்கலம் ராயபாளையத்தில் நடைபெறும் இணைப்பு விழாவிற்கு அவர்கள் நான்கு பேருந்துகளில் பயணம் செய்து தங்களை திமுக கழகத்தில் இணைத்து கொண்டனர். இதே போல கீழமாத்தூர் சாகுல் ஹமீது தலைமையில் கீழமாத்தூர் நிர்வாகிகள் நான்கு பேருந்துகளில் சென்று தங்களை திமுக கழகத்தில் இணைத்துக் கொண்டனர். திருப்பரங்குன்றம் ‌வடக்கு ஒன்றிய செயலாளர் திருக்குமரன் அவர்களை வரவேற்று சிறப்பு செய்தார்.

மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தாராபட்டி மற்றும் கீழ மாத்தூர் கிளை கழகங்களில் இருந்து சுமார் 750 பேர் திமுகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.