• Tue. Apr 21st, 2026
WhatsAppImage2026-04-16at222113
previous arrow
next arrow
Read Now

அம்மாவின் பிறந்தநாள் மக்களுக்கு சில்வர் தட்டு மற்றும் அன்னதானம்..,

ByPrabhu Sekar

Mar 6, 2026

செங்கல்பட்டு மாவட்டம் பரங்கிமலை மேற்கு ஒன்றியத்துக்குட்பட்ட முடிச்சூர் ஊராட்சியில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மாவின் 78வது பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக சார்பில் பொதுமக்களுக்கு சில்வர் தட்டு மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

செங்கல்பட்டு மேற்கு மாவட்ட மகளிர் அணி சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு பரங்கிமலை மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் எம்.பி. மனோகரன் தலைமையேற்றார். மாவட்ட மகளிர் அணி பொருளாளர் எஸ். லலிதா சுரேந்திரன் ஏற்பாட்டில் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் சிட்லபாக்கம் ச. இராஜேந்திரன் கலந்து கொண்டு, புரட்சித்தலைவி அம்மா அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து பொதுமக்களுக்கு சில்வர் தட்டு மற்றும் அறுசுவை உணவுடன் அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட மகளிர் அணி தலைவர் சுபாஷினி, மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர் அமுதா, பரங்கிமலை மேற்கு ஒன்றிய துணைச் செயலாளர் கற்பகம் சீனிவாசன், ஒன்றிய மகளிர் அணி துணைத்தலைவர் புவனேஸ்வரி உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, பகுதி, வட்ட மற்றும் கிளை நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் அம்மாவின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற இந்த அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.