• Thu. Nov 27th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

வெளியானது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தேதி..!

Byகாயத்ரி

Dec 21, 2021

தமிழகத்தில் கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற வேண்டிய உள்ளாட்சித் தேர்தல் மூன்றாண்டுகளாக நடத்தப்படாமல் இருந்தது. நீண்ட சட்டப் போராட்டத்துக்கு பின்னர், உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து கடந்த 2019-ம் ஆண்டு ஒன்பது மாவட்டங்களை தவிர்த்து ஏனைய மாவட்டங்களில் ஊராட்சி பகுதிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெற்றது. நடைபெற்றது.

இதையடுத்து, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி மற்றும் ஒன்பது மாவட்ட ஊரகப் பகுதிகளுக்கு எப்போது உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்ற கேள்வி பரவலாக எழுந்த நிலையில், மீண்டும் உச்ச நீதிமன்றத்தின் கிடுக்கிப்பிடி உத்தரவைத் தொடர்ந்து, விடுபட்ட 9 மாவட்ட ஊராட்சிகளுக்கு அண்மையில் தேர்தல் நடந்தது.

அதன் தொடர்ச்சியாக, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை விரைவில் நடத்துவதற்கான ஏற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பே தேர்தல் தேதி தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை பிப்ரவரி மாதம் நடத்த மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது, அதன்படி, பிப்ரவரி 12, 13 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தலை நடத்த திட்டமிடப்பட்டு வருவதாக தெரிகிறது. இதற்கான அறிவிப்பு ஜனவரி மூன்றாவது வாரத்தில் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.