• Thu. Jul 23rd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

குடும்ப அட்டைதாரர்களுக்கு 5000 ரூபாய் நிவாரணம் – முதல்வர் துவக்கி வைப்பு

Byகாயத்ரி

Dec 21, 2021

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த மாதம் பலத்த மழை பெய்தது. இதனால் நீர் நிலைகள் நிரம்பி வழிந்தது. அதுமட்டுமின்றி எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சியளித்தது. மழை வெள்ளத்தால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், புதுச்சேரியில் கனமழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட சிவப்பு குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் மஞ்சள் குடும்ப அட்டைதாரர்களுக்கு 5000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் என்.ரங்கசாமி கடந்த மாதம் அறிவித்திருந்தார்.இதன்படி, வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள சிவப்பு அட்டைதாரர்களுக்கு தலா 5,000 ரூபாய் வழங்கும் பணியை சட்டமன்ற வளாகத்தில் முதல்வர் என்.ரங்கசாமி தொடங்கி வைத்தார்.

அதேபோல் வறுமைக் கோட்டிற்கு மேல் உள்ள மஞ்சள் அட்டைதாரர்களுக்கு தலா 4,500 ரூபாய் வழங்கப்படும் என முதல்வர் என்.ரங்கசாமி தெரிவித்தார்.