• Mon. Mar 2nd, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

மு.க.ஸ்டாலின் 73வது பிறந்தநாள் அன்னதானத்துடன் சிறப்பான கொண்டாட்டம்..,

ByPrabhu Sekar

Mar 2, 2026

சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் தெற்கு பகுதியில், திமுக சார்பில் கழக தலைவர் மற்றும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 73வது பிறந்தநாள் விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.

பகுதி செயலாளரும் மண்டல குழுத் தலைவருமான வே.கருணாநிதி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், திமுக கழக கொடி ஏற்றப்பட்டு, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம் தொடங்கப்பட்டது.

விழாவில் உரையாற்றிய பகுதி செயலாளர் வே.கருணாநிதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக மக்களுக்காக எண்ணற்ற நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் என்றும், மத்திய அரசு கல்வி நிதி வழங்காத நிலையிலும் தமிழ்நாடு கல்வித் துறையில் முன்னணி மாநிலமாக திகழ்கிறது என்றும் தெரிவித்தார். மேலும், வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் திமுக ஆட்சி அமைக்க கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் முழு உறுதியுடன் பணியாற்ற வேண்டும் என அழைப்பு விடுத்தார். நிகழ்ச்சியில் கட்சியினர் உறுதிமொழியும் ஏற்றனர்.

இதனைத் தொடர்ந்து, சமூக நலத்திட்டத்தின் ஒரு பகுதியாக ஏழை மற்றும் எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சுமார் 1500 பேருக்கு உணவு வழங்கப்பட்டு மனிதநேய சேவையுடன் விழா சிறப்பிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் மாமன்ற உறுப்பினர்கள் மதினாபேகம், கல்யாணி டில்லி, ரம்யா சத்யபிரபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும், பம்மல் தெற்கு பகுதி திமுக நிர்வாகிகள், வட்ட கழக செயலாளர்கள், மகளிரணி உறுப்பினர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று முதலமைச்சருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

பம்மல் பகுதியில் சமூக சேவையுடன் இணைந்த இந்த பிறந்தநாள் விழா, பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.