மதுரை விமான நிலைய வளாகத்தில் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடைபெற்ற மத்திய அரசின் நெடுஞ்சாலைத்துறை மற்றும் ரயில்வே துறைக்கான திட்டங்கள் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது .
விழாவில் பிரதமர் ரூபாய் 4 ஆயிரத்து,400 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

மதுரை விமான நிலைய வளாகத்திற்குள் அமைக்கப்பட்டுள்ள அரசு நிகழ்ச்சி மேடைக்கு வந்தடைந்து ரூ.4,400 கோடி மதிப்பிலான உள்கட்டமைப்பு திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்தார்
பின்பு தேசிய நெடுஞ்சாலை-332A-வில் மரக்காணம்-புதுச்சேரி பிரிவு மற்றும் தேசிய நெடுஞ்சாலை-87-ல் பரமக்குடி-ராமநாதபுரம் பிரிவு ஆகியவற்றை நான்கு வழிச்சாலையாக மாற்றுவதற்கான திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
தமிழகத்தில் மறுசீரமைக்கப்பட்ட 8 ரயில் நிலையங்களை பிரதமர் திறந்து வைத்து, சென்னை கடற்கரை-சென்னை எழும்பூர் 4-வது பாதையை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
பின்பு விழாவில் பேசிய பிரதமர் மோடி

தமிழ்நாட்டின் என் சகோதர சகோதரிகளே வணக்கம் என் சகோதர சகோதரிகளே வணக்கம் புனித மதுரை மாநகரான இந்த பழமையான நகரில் வருவதை நான் பெரும் கௌரவமாக உணர்கின்றேன் மீனாட்சி அம்மைக்கும் நான் தலை வணங்குகிறேன் தமிழ்நாட்டின் வளர்ச்சி பயணத்தின் பெருமிதமான அத்தியாயம் இன்று நாம் 4 ஆயிரத்து 400 கோடி ரூபாய் மேற்பட்ட சில திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி திறந்து வைத்து நாட்டிற்கு அர்ப்பணம் செய்திருக்கின்றோம் .

இந்த திட்டங்கள் மாற்றி அமைத்து நாட்டின் பொருளாதாரத்தை ஊக்கப்படுத்தி பல லட்சம் மக்களின் வாழ்க்கையை உருவாக்கக்கூடிய வகையிலே வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தும் சந்தைகளை சென்றடைய விவசாயிகளுக்கு மேம்பட்ட சாலைகள் சுற்றுலா பயணிகளும் புனித யாத்திரை மேற்கொள்வோருக்கும் சுலபமான பயணம் வர்த்தகத்துக்கு உகந்த வேகமான போக்குவரத்து அந்த வகையில் உயர்தர கட்டமைப்புகளை உருவாக்குவது என்பது மக்களுக்கு அதிகார பங்களிப்பை அமைத்து தருவது என்று பொருள்.

நண்பர்களே கடந்த 12 ஆண்டுகளாகவே இந்திய அரசாங்கம் தமிழ்நாட்டை நெடுஞ்சாலை வலை பின்னலில் மகத்தான முதலீடுகளை செய்து வந்திருக்கின்றது.
2014 ஆம் ஆண்டு முதல் 4000 கிலோமீட்டர் அதிகமான அளவில் நெடுஞ்சாலைகள் போடப்பட்டிருக்கின்றன இரண்டு பெரும் இன்று திட்டங்கள் அடிக்கல் நாட்டப்பட்டிருப்பதிலேயே நான் தேர்வு வகை அடைகின்றேன்.
முதலாவதாக மரக்காணம் புதுச்சேரி பிரிவிலே 2100 கோடி ரூபாய் முதலீட்டில் நான்கு வழி சாலை திட்டம் இது தமிழ்நாடு புதுச்சேரியின் கரைப்பகுதியில் சுற்றுலாத்துறை வர்த்தகம் பொருளாதாரத்தை பலப்படுத்தும் அடுத்ததாக பரமக்குடி ராமநாதபுரம் பாதையை நான்கு வழி பாதையாக மாற்றுதல் இந்த திட்டத்தில் நாங்கள் 1800 கோடி ரூபாயை முதலீடு செய்ய இருக்கின்றோம்.
ராமேஸ்வரம் தனுஷ்கோடி ஆகிய இடங்களை சென்றடைவதை கணிசமாக இது மேம்படுத்துகின்றது. மேலும் இதனால் புனித பயணம் மேற்கொள்வோருக்கு மற்றும் கடல் சார் பொருட்களின் போக்குவரத்தையும் இது மேம்படுத்தும்

கடந்த 10 ஆண்டுகளில் இந்திய ரயில்வே துறை சரித்திரபூர்வமான ஒரு மாற்றத்தை சந்தித்திருக்கின்றது இது நவீன வசதிகளை.திறந்து மக்கள் சார்ந்த போக்குவரத்து முறையாக உருமாறி இருக்கின்றது.
எங்கள் அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்த பிறகு கிட்டத்தட்ட ஒன்பது மடங்கு அதிகரித்திருக்கின்றது. 2009 முதல் 2014 ஆம் ஆண்டுகள் வரையிலான வருடாந்திர ரயில்வே நிதி ஒதுக்கீடு வெறும் 880 கோடி ரூபாயாக மட்டுமே இருந்தது 2026 27 ஆம் ஆண்டிலேயே 7600

1300 கிலோமீட்டர் அதிகமான புதிய ரயில் தடங்கள் போடப்பட்டிருக்கின்றன 97 சதவிகிதம் மின்மயமாக்கல் எட்டப்பட்டு இருக்கின்றது. பாதுகாப்பு மற்றும் செயல் திறனை அதிகரிக்கும் வகையிலே நூற்றுக்கணக்கான மேம்பாலங்களும் சுரங்க பாதைகளும் அமைக்கப்பட்டிருக்கின்றன .
கடந்த ஆண்டுதான் தமிழ்நாட்டிலே புதிய பாம்பன் பாலத்தை திறந்து வைக்கும் நற்பெயர் எனக்கு கிடைத்தது அருமை சொந்தங்களே இந்தியாவின் முதல் செங்குத்து தூக்கு கடல் பாலம் என்ற வகையிலே பொறியியல் சிறப்புத் தன்மைக்கு இது ஒரு அடையாளம் இந்த பாலம் மட்டுமே கூட தமிழ்நாட்டில் சுற்றுலா பயணிகளில் பயணிகளை பெரிய அளவில் இருக்கும் விஷயமாக இருக்கின்றது
ஒன்பது வந்தே பாரத் 9 அம்ருத் பாரத ரயில்களும் தமிழ்நாடு மக்களுக்கு சேவையாற்றி வருகின்றது அதிவேக விரைவு வண்டிக்கான ரயில் பெட்டிகளை சென்னையில் இருக்கும் ரயில் பெட்டி இணைப்பு தொழிற்சாலையில் தயாரிக்கின்றது.
மேக் இன் இந்தியா இந்தியாவில் தயாரிக்கும் நம்முடைய தொலைநோக்கு திட்டம்

நமது இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்துவது நமக்கு பெருமை சேர்க்கும் விஷயம் அம்ருத் வாரத்தின் நிலை திட்டத்தின் படி 77 ரயில் நிலையங்களில் நவீன பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த ரயில் நிலையங்கள் சவுரியம் அனுவல் தன்மை மற்றும் உள்ளூர் அடையாளத்தை ஒன்றிணைகின்றது தமிழ்நாடு எங்கிலும் நாம் 8 பரிணமிக்கப்பட்ட ரயில் நிலையங்களை தொடங்கி வைத்திருக்கின்றோம் சென்னை கடற்கரை சென்னை எழும்பூர் நான்காவது தடம் காரணமாக சென்னையின் தின சரி பயணிக்கும் ஆயிரக்கணக்கான பயணிகளுக்கு ஆதரவாக இருக்கும்.
கும்பகோணம் வேர்காடு வேலூர் ஆகிய இடங்களில் ஆகாச வாணியின் புதிய பண்பலை அஞ்சல் நிலையங்கள் தொடங்கி வைப்பதில் நான் வெறும் மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்த வானொலி அஞ்சல் நிலையங்கள் இன்று முதல் உங்கள் சேவையில் அர்ப்பணிக்கப்பட்டிருக்கின்றது
தமிழ்நாடு உள்கட்டமைப்புக்கான நிதி ஒதுக்கீடு கடந்த 10 ஆண்டுகளோடு ஒப்பிட்டு பார்க்கயில் மூன்று மடங்கு அதிகமாய் இருக்கின்றது .
2026 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டமானது தமிழ்நாட்டின் மீது தனது பலமான கவனத்தை செலுத்துவதன் வாயிலாக இந்த போக்கினை தொடர்கிறது. இந்த வரவு செலவுத் திட்டத்தில் பெங்களூரு சென்னை மற்றும் சென்னை ஹைதராபாத் காண புல்லட் ரயில் இடைவெளிகளை நாங்கள் முன் வைத்திருக்கிறோம் இவை இந்த பகுதியில் பொருளாதாரம் முழுவதையும் புரட்சிகரமானதாக மாற்றும் அரிய வகை கனிம வளம் கொண்ட இடைவெளிகளில் ஒரு பகுதியாக தமிழ்நாட்டினை இந்த வரவு செலவுத் திட்டம் அறிக்கை நிலைநிறுத்துகின்றது.
அரிய வகை கனிம வளங்கள், உயர்தர தயாரிப்பு ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பம் முன்னேற்றத்தை மேம்படுத்துகின்றது
வளமான வரலாறு மற்றும் மரபுக்குச் சொந்தமான மாநிலம் ஆதிச்சநல்லூர் போன்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் உலகளாவிய மரபச்சார்பிடங்களாக மேம்படுத்தப்படும்.

புலிகாட்டி ஏரி பொதிகை மலை போன்ற இடங்களை சுற்றி சுற்றுச்சூழல் சுற்றுலா முன்னெடுப்புகள் புதிய வேலைவாய்ப்பினை ஏற்படுத்தும் அதே வேளையில் இயற்கையான சூழல் அமைப்புகளை பாதுகாப்போம்.
தேசம் எங்கிலும் சுமார் 200 தொழில் துறை தொகுப்புகள் இடம் காணப்பட்டு தயாரிப்பினை ஊக்கப்படுத்தும் வகையிலே ஆதரிக்கப்படும் தமிழ்நாட்டிலே பல தொழிற்சாலைகள் இருக்கின்றன என்பதை நாம் அனைவரும் நன்றாக அறிவோம்.
ஆகையால் இந்த திட்டம் இங்கே இருக்கும் இளைஞர்களுக்கு உயர உதவியாக இருக்கும்
2047 ஆம் ஆண்டிற்கு உள்ளாக வளர்ச்சி அடைந்த தேசத்தை உருவாக்க வேண்டும் என்ற உணர்வினால் ஒவ்வொரு இந்தியரும் ஒன்று பட்டு தேசத்தின் எதிர்காலத்தை வழிபடுவது தமிழ்நாடு தனது தீர்மானமான பங்கினை கண்டிப்பாக மாற்றும் நம் அனைவரின் ஒட்டுமொத்த வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்க நாம் வளர்ச்சி அடைந்த தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என்பதுதான் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை அளிப்பதிலும் மாநிலத்தின் முன்னேற்றத்தை உறுதி செய்வதிலும் மத்திய அரசு முழுவதும் அர்ப்பணிபப்புடன் செயல்பட்டு வருகிறது நன்றி என பிரதமர் மோடி விழா மேடையில் பேசினார்.







