• Sun. Mar 1st, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

மு.ஞானமூர்த்திக்கு கௌரவ டாக்டர் பட்டம்…

ByT. Balasubramaniyam

Mar 1, 2026

சென்னையில் மைலாப்பூர் கற்பகம் இன்டர்னேஷனல் ஓட்டலில் சர்வதேச தமிழ் கலாச்சாரப் பல்கலைக்கழகத்தின் சார்பில் கௌரவ முனைவர் பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது.விழாவிற்கு துணைவேந்தர் முனைவர் மணிகண்டராஜா தலைமை வகித்தார்.

விழாவில் ஓய்வுபெற்ற நீதிபதி வெங்கடேசன், கலைமாமணி விருது பெற்ற நடிகை அம்பிகா, தொழிலதிபர் அமிர்தவள்ளி, கொற்றவை மாத இதழ் ஆசிரியர் கொற்றவை நாகராஜன் ஆகியோர் உலகத் திருக்குறள் கூட்டமைப்புத் தலைவர் கவிஞானி மு. ஞானமூர்த்தி ஆற்றிய சமூகத் தொண்டைப் பாராட்டி டாக்டர் (முனைவர்) பட்டமும், பதக்கமும் வழங்கி கௌரவித்தனர்.